உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம் நேரு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நம் நேரு


இந்த விதமாக இந்தியாவின் பலதரப்பட்ட மனிதர்களும் எதையோ எதிர்பார்த்தார்கள்; காத்திருந்தார்கள்; ஆசையும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் அச்சமும் கவலையும் பதுங்கி உறைந்தது அவர் தன் நெஞ்சிலே.

ஆளும் இனம் இவற்றை எல்லாம் உணராமல் இருக்க முடியுமா? போட்டார்கள் ஊரடங்குச் சட்டங்களை, தீட்டினார்கள், ‘ரெளலட்பில்’களை, சட்டம் உறுதி கூறும் பாதுகாப்புகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இஷ்டப்பட்டால் யாரையும் கைதுசெய்யலாம். விசாரணை இல்லாமலே ஜெயிலில் தள்ளலாம் என்றெல்லாம் உரிமை அவர்களுக்கு உரிமை அளித்தது ‘ரெளலட்பில்’. புகைந்துகொண்டிருந்த இடத்திலே பெருநெருப்பு பற்றும்படி பெட்ரோலேக் கொட்டியது போலாயிற்று அரசினரின் போக்கு. கோபக்கொதிப்பு அலை இந்தியா பூராவும் மோதி எழுந்தது. எல்லோரும் எதிர்த்தார்கள், சர்க்கார் தயவைப்பெற விரும்பிய மிதவாதிகள் கூட எதிர்ப்புக் காட்டினார்கள். ஆனாலும் ஆளவந்த அந்நியர்கள் தங்கள் இஷ்டம்போல் சட்டம் செய்து தீர்த்தார்கள். மூன்று வருஷங்கள் இந்நிலை நீடித்தது. இந்திய சரித்திரத்திலேயே முக்கியமான கட்டம் அது. 1857 இந்தியப் புரட்சிக்குப் பிறகு இந்நாடு அவ்விதப் பெருங்குழப்பம் அனுபவித்தது இம்மூன்றாண்டுகளில்தான் என்று நேரு எழுதியிருக்கிறார்.

அப்பொழுது 1919-ம் வருஷம்...

அவ்வருஷ ஆரம்பத்தில் காந்திஜீ கடுமையானநோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்து தேறியிருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/49&oldid=1367017" இலிருந்து மீள்விக்கப்பட்டது