உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம் நேரு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நம் நேரு

அத்தியாயம் 1.


மண்ணோடு மண்ணாகக் கிடந்து, தன் மதிப்பை உணராது அடிமையாக உழன்ற இந்திய மக்களை விழித்தெழச் செய்து, உரிமை உணர்வு புகுத்தி, சுதந்திரம் பெற்ற மக்களாக வாழும்படி மாற்றிய மாபெரும் தலைவர் மகாத்மா காந்திஜீ ஆவர்.

அண்ணல் காந்திஜீ காட்டிய வழியில் அடி எடுத்து வைத்து, அவருக்குத் துணையாய், தோழனாய், தொண்டராய் பணியாற்றி, மக்களின் உள்ளத்திலே தனி இடம் பெற்று விட்ட தலைவர் நம் நேரு. காந்தி அடிகளின் திட்டங்களைச் செயலாற்றிய காங்கிரஸ் மகாசபையின் காரியதரிசியாய் தொடர்ந்து பல ஆண்டுகள் பணி புரிந்து. பல தலைவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று. கட்சியை வெற்றிப் பாதையில் நடத்தும் தலைவராகி, நாட்டுக்கு நல்வழிகாட்டும் பிரதமரும் ஆகித் திகழ்கிறவர் பண்டித நேரு.

ஜவஹர்லால் நேரு இன்றைய இந்தியாவின் இணையிலாத் தலைவர். ஆசியாவின் மதிப்பை அதிகப் படுத்திய அரசியல் அறிஞர். உலக அரசியலில் நியாயமான, யோசனைகளைக் கூறி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டங்களை வகுத்துக் காட்டும் திறமை பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/8&oldid=1376971" இலிருந்து மீள்விக்கப்பட்டது