உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம் நேரு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

நம் நேரு


மேதை அவர், உலகத்தில் நிலையான சமாதானத்தை நிறுவ அரும்பெரும்பாடுகள் பட்டு வரும் சிந்தனையாளர். உலகத் தலைவர்களுள் முக்கியமானவர்களில் முக்கியமானவர் அவர். ஓயாத உழைப்பின் உருவம். உயரிய பண்புகளின் உறைவிடம். ’மனித குல மாணிக்கம்’ நேரு.


காலகாலமாகத் தனிப் பெரும் புகழ்பெற்று வந்துள்ளது இந்தியா. அதன் மாண்பை மேலும் அதிகமாக உயர்த்திய பெருமை மகாத்மா காந்திஜீக்கு உண்டு. கிடைத்த மாண்பைக் குறையாமல் காத்ததோடு, இன்னும், அதிகமாக வளர்த்து உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் இழுத்து நிறுத்தி, சரித்திரத்தை உருவாக்கி வருகின்ற சிறப்பு பண்டித நேருவுக்குக் கிடைத்திருக்கிறது.


சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் ஆற்றல் ஒருசுக தலைவர்களுக்கே உண்டு. இந்திய மக்களை மனிதர் களாக்கியதுடன் புதுயுக உதயத்தை வரவேற்கக் கூடிய ஆர்வமுள்ளவர்களாக மாற்றிய பெருமை காந்திஜீக்கு உண்டு என்றால், விழித்தெழுந்த நாட்டினரின் உணர்வு வெள்ளைத்துக்கு ஒர் போக்குக் காட்டி, அழிவுச் சக்தியை மட்டுப்படுத்தி ஆக்க வேலைகளுக்கு அடிகோலி, சமுதாயத்தின் ஆவன செய்து இந்தியாவின் சரித்திரத்தைச் செம்மைப்படுத்தும் பெருமை நேருவையே சாரும். அதற்கேற்ற தகுதியும் திறமையும் பெற்ற தலைவர் அவர் தான். அதனால் தான், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக வந்த நேரு மறுபடியும் அதே பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டு மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/9&oldid=1361277" இலிருந்து மீள்விக்கப்பட்டது