உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

!

2

1

அடுத்து, சைவசித்தா மகா சமாசத்தாரின் சங்க இலக் கியத் தொகுதிகள் (இப்போது பாரிநிலைய வெளியீடு) வெளி வந்து தமிழ்வளம் பெருக்கின.

சங்க இலக்கியங்களின் மூல பாடங்களைச் செவ்வையாக வெளியிட்டுத் தமிழ்நலம் பேணிய மர்ரே கம்பெனியாரின் நற்றிணைப் பதிப்பும் பின்னர் வெளிவந்தது.

இச் சான்றோர்களின் தமிழ்ப்பணியால் தமிழ் அறிந்தா ரெல்லாம் நற்றிணை பற்றிப் பேசவும், ஆராயவும், கற்றறிந்து களிக்கவும், பேச்சிலும் எழுத்திலும் எடுத்துக்காட்டி விருந் தளிக்கவும், நற்றிணையும் எங்கணும் மணம் பரப்பலாயிற்று.

இந்நிலையிலே, பலதிறத்துத் தமிழன்பர்களும், நற்றிணைச் செய்யுட்களின் செறிவைக் கற்றறிந்து, தமிழேற்றத்தையும் தமிழ் மரபுகளையும், தமிழ்ப் பேச்சின் தகுதிசான்ற திறத்தை யும் உணர்ந்து போற்றுவதற்குத் துணையாக அமையவேண்டும் என்னும் ஆர்வத்தால் இத் தெளிவுரையையும் அமைத் துள்ளேன். தமிழன்பர்கள் குறைமறந்து குணம் கொண்டு போற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.

தமிழிலக்கியப் பெரும்பணியில் தணியாத ஆர்வத்தோடு பணியாற்றுவதிலேயே மனங்கொண்டு, புகழோடு திகழும் பாரி நிலையத்தின் உரிமையாளர் திரு. செல்லப்பனார் அவர்கள் இதனைத் தம் பாரிநிலைய வெளியீடாக உவந்தேற்று அச்சிட்டு வழங்குகின்றார்கள். அவர்கட்கு என்றும் நன்றியுடையேன்.

தாள் விலையின் ஏற்றமும், மற்றும் பதிப்புச் செலவுகளின் ஏற்றமும். இந் நூலின் விலையை எங்கள் கருத்தையும் கடந்து கூடுதலாக்க வேண்டிய நெருக்கடியை விளைத்துவிட்டன. தமிழ் அன்பர்கள். அதனைப் பாராட்டாது விருப்போடு வாங்கிக் கற்று, மென்மேலும் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருவதற்கான ஊக்கமும் ஒத்துழைப்பும் எனக்குத் தருவார்கள் என்று நம்புகின்றேன். வாழ்க தமிழ்!

வளர்க தமிழார்வம்! புலியூர்க் கேசிகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/8&oldid=1636792" இலிருந்து மீள்விக்கப்பட்டது