உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கடோடி இலக்கியம்

தானே இருக்கவேண்டும்? இது பெரிய ஊகம் அல்லவே? ஆலுைம் பேச்சுக் கொடுத்துச் சமாசாரம் வருவிக்க வேண்டுமே! : - - • . . . .

சுப்பையன் இப்போது வருணிக்க ஆரம்பித்து

“கண்ணுடி தோற்குமடா - வேலையா' என்கிரு:ன். அவளுடைய இள மேனியில் வெயில் படும்போது பளபளக்கிறது போலும்! -

மேலே உரையாடல் வேகமாகப் படர்கிறது.

"கண்ணைப்ப றிக்குதோடா-சுப்பையா' என்று வேலையன் கேட்கிருன். அவள் அருகில் வந்து கொண்டிருக்கிருள். பளபளப்பாகத் தெரிந்த அழகுப் பிழம்பிலே இப்போது தனித்தனியே அவயவங்கள் புலப்படுகின்றன. அந்தக் கண்ணுடி தோற்கும் உருவத்துக்குக் கிரீடம் சூட்டினது போல விளங்கும் கொண்டை மைபோலக் கறுத்துப் பளிச்சிடுகிறது; அந்தக் கருமையின் நடுவிலே வெள்ளைப் பூ விளக்கமாகத் தெரிகிறது. சுப்பையன் வருணனை யைத் தொடர்கிருன்: - -

"கொண்டையிலே பூவிருக்கு-வேலையா. வேலையன் இப்போது தன் மனத்திலே குறிப்பிட்ட ஒரு பெண் உருவத்தைப் பிரதிஷ்டை செய்து கொண்டான். அவள், தன் காதலுக்குப் பாத்திரமானவளாகத்தான் இருக்க வேண்டுமென்பது அவன் யோசனை. தான் நினைக்கும் அவள்தான) வருபவள் என்ற சந்தேகம் நீங்கின பாடில்லே. - - - . . ."

கொளச்சு முடி போட்டிருப்பா- சுப்பையா' என்று அகக்கண்ணுல் காணும் காட்சியை அவன் வருணிக்கிருன்ெ

அவள் வெகு வேகமாக வருகிருள்.