35
தவிர, பிற எல்லாவற்றிலும் முன்னே நிற்கிருறாகளே நம் இளைஞர்கள் என்ற ஏக்கத்தோடு அப்பள்ளியை விட்டு வெளியேறினேன்.
அந்நிகழ்ச்சி, டாஸ்கண்ட் பள்ளி நூல் நிலையத்தில் நினைவிற்கு வந்தது. வெட்கத்தையும் வேதனையையும் விளைவித்தது. ஆண்டிற்கு முப்பது நூல்களுக்குக் குறையாமல் படிக்கும் டாஸ்கண்ட் மாண வர்கள் எங்கே! ஆண்டிற்கு ஒன்றே போதும் என்றிருக்கிற தமிழ்நாட்டுத் தங்கக் கம்பிகள் எங்கே! 'அறிவுடையார் எல்லாம் உடையர்!' ஆம். அன்றே சொன்னுர். நன்றே சொன்னர். இதை, இன்றும் சொல்லுவோம்; என்றும் சொல்லுவோம்; இங்கும் சொல்லுவோம்; எங்கும் சொல்லுவோம்’ என்று பேச்சுப் போட்டிகளில் பரிசு பெறமட்டுமே ஆயத்தமாகி வரும் தம்பிகளே எண்ணி வருந்தினேன். கற்றனைத்துறும் அறிவு என்ற வழியைத் தெரியாதவர்களுக்காக இரங்கினேன். கற்றபின் நிற்க அதற்குத் தக' என்ற சங்கடக் குறளை ஏறிட்டுப் பார்க்காத இளைஞர்கள் பெருகுவதைப் பற்றி ஏங்கினேன். இவர்கள் போக்கிலே, என்றாவது ஒருநாள் நல்ல திருப்பம் வராதா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
என்ன செய்ய? நம் அறிவுரையெல்லாம் ஏட்டிலே; இல்லையேல் மேடையிலே, புலமையைக்காட்ட அல்லது பிறரை மயக்க! உரைத்த வண்ணம் நடக்கவா? இப்படிச் சில எண்ண அலைகள் மோதின.