உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

சோவியத் ஒன்றியம். இது பெரும் நாடு : சமதர்ம நாடு; பாட்டாளிகளின் பொதுச் சொத்து ; தொழிலாளிகளின் பொது உடைமை.

'இல்லாமை; இது இயற்கை வறுமை; இது விதி-இப்படியொரு உளப் புற்றுநோய் மானிடத்தைப் பற்றி அழித்துக்கொண்டு வந்தது. அதைப் போக்கி, எல்லோரும் வாழ்வோம்’ நன்றாக வாழ்வோம், ஒன்றாக வாழ்வோம்' என்னும் நிலையை உருவாக்கியது சோவியத் ஒன்றியம்.

ஆமைகளாக இருந்த பாட்டாளிகளை ஆண்மையாளர்களாக நிமிர வைத்து, அவர்களுக்கு வேலையும், உணவும், உடையும், உறையுளும் தந்ததோடு, பாட்டாளிகளையும் படிப்பாளிகளாகப் பெரும் பட்ட தாரிகளாக ஆக்கி வாழும் நன்ணாடு சோவியத் ஒன்றியம்.

அந் நன்னாடு நமக்கு நட்பு நாடு. இந்தியாவின் வளத்திலும் வாழ்விலும் அக்கறையுடைய நாடு. நமக்கு இடுக்கண் நேரும்போதெல்லாம் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் விரைந்து கை கொடுக்கும் நட்புறவு நாடு.

இச் சோவியத்திற்கு இருமுறை சென்று கண்டு வரும் நல்வாய்ப்பினைப் பெற்றேன் நான். பாலர் முதல் பாட்டிகள் வரை ஆர்வத்தோடு கல்வியில்