48
உஸ்பெக்கில் முகமூடி போட்டு மறைத்துக், கொண்டு சென்றவர்களை நாங்கள் காணவில்லை. எவ்வளவு தலைகீழ் மாறுதல் எப்படி முடிந்தது? கிளர்ச்சியால், தியாகத்தால். முகமூடியை எடுத்து எறிந்துவிட்டு, வெளியே வந்த முதல் புரட்சிப் பெண்மணியைச் சும்மாவிடவில்லை, அன்றைய உஸ்பெக் மக்கள். பிடித்துக் கொளுத்திவிட்டனர். பழமையின் கொடுமை என்னே! அன்று சுதந்திரப் பெண்மணியைக் கொளுத்த முடிந்தது. ஆனால், அத்தீ சும்மா விட்டதா? சுதந்திர உணர்ச்சியைப் பழமை எதிர்ப்பைச் சூடேற்றிவிட்டது. பெண்டாட்டிதனை அடிமைப்படுத்த வேண்டிப் பெண் குலத்தை முழுதடிமைப்படுத்தும் கண்மூடிப் பழக்கத்தை ஒழித்துவிட்டார்கள், உஸ்பெக் மக்கள். புதுவழிகாட்டி, வெந்தழலில் வெந்த அவ்வீராங்கனையின் உருவப்படத்தை டாஸ்கண்ட் வரலாற்றுக் கண்காட்சியில் கண்டோம். 'பழமை' இன்று காட்சிப் பொருளாகிவிட்டதே என்று சிந்தனையில் ஆழ்ந்தோம்.
டாஸ்கண்ட் பல்கலைக் கழகத்தில் பல துறைகள் உண்டு. ஒரு துறை, கீழ்த்திசை மொழித் துறை. இத்துறை இன்று நேற்று ஏற்பட்டதன்று. பதினேந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருவது. இதில் பல பகுதிகள் உண்டு. இந்தியை முதல் மொழியாகவும் உருதுவைத் துணை மொழியாகவும் கற்பது ஒரு பிரிவு. உருதுவை முதல் மொழியாகவும், இந்தியைத் துணை மொழியாகவும் கற்பது மற்றோரு பிரிவு. சீனமொழி, ஜப்பானிய மொழி, அராபிய