உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தில்லையம்பல நடராஜா, செழுமை நாதனே பரமேசா என்றும் பாடுகிறன். இங்கே தமிழ் படித்தவர்கள்! தமிழை வைத்துப் பிழைக்கிறர்கள். மாரியம்மனுக்கும் ஒரு கும்பிடு! மேரியம்மனுக்கும் ஒரு கும்பிடு! என்பது மலின மாக விளம்பரம் பெறக் கிடைத்த வழியாகிவிட்டது. நாவல்களைப் படமாக்கும்போது புதிய கலை நுட்பங்களைத் தான் பார்க்க முடிகிறதே தவிர சமூக மாற்றத்திற்கான சுவடுகளை அங்கே காண முடியவில்லை. அழகு, அறிவு, பணம் இவற்றிற்கு அடிமைப்பட்டு மூளைச் சுரண்டலுக்கு ஆளாகுபவரே இங்கே அதிகம். அதே நேரத்தில் இலங்கை யில் தமிழ் நாவல்கள் வளர்கின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. முதல் வரிசை விமர்சகர் பேராசிரியர் டாக்டர் கலாநிதி கைலாசி அவர்கள் கூறுவதைப்போல இந்தச் சமூக மாற்றத்திற்கான போர்ப் பிரகடனங்கள் இன்னும் தமிழ் நாவல்களில் இடம் பெறவில்லை. 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/23&oldid=786045" இலிருந்து மீள்விக்கப்பட்டது