வழங்கப்பட்டதில்லை - தங்களை லேண்ட் லார்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வதை பெருமையாகக் கருதினார்கள். தங்களைப் பற்றி விவரம் எழுதவேண்டிய அவசியம் ஏற்படுகிறபோது அரசு சம்பந்தப்பட்ட மனுக்கள் மற்றும் பத்திரங்களில் - தொழில் என்று குறிக்கும் இடத்தில் சுக.ஜீவனம் என்று பலரும் குறிப்பிட்டு வந்தார்கள். ‘சுகpவனம் ஒரு தொழில் எனக் குறிக்கப்படுவதும் ஒரு விசித்திரமாகத் தோன்றியது எனக்கு 部 3 播 கார்காத்தார் பற்றி சில விவரங்கள் சொல்லவேண்டும். முன்னொரு காலத்தில், விவசாயத்தை நம்பி வாழ்ந்த வேளாண் மக்கள் (வேளாளர்கள்) ஒரு சமயம் மழையின்றி, பயிர்கள் காய்ந்ததனால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவர்களில் சிலர் உண்ணாநோன்பிருந்து, இந்திரனை எண்ணிதபம் செய்து, மழை வேண்டும் என்று பிரார்த்தித் தார்கள். அவர்களது பிரார்த்தனைக்கு இணங்கி இந்திரன் கார்மேகங் களை அனுப்பி, மழைபெய்யச் செய்தான். இவ்விதம் அவர்கள் பயிர்களைக் காப்பாற்றிய காரணத்தால் கார்காத்த வேளாளர்கள் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் வேளாளர்களில் உயர்ந்தவர்கள் ஆனார்கள். இவ்விதம் மூத்தோர் அநேகர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். முன்னோர்களில் பலர் தங்களை பத்தரைமாத்து' என்று கூறிக் கொள்வதும் உண்டு தங்கத்தில் பத்தரைமாத்து சுத்தமானதாக மதிப்பு உயர்ந்ததாகக் கருதப்படுவது வழக்கம் மிகவும் தொன்மை வாய்ந்த கார்காத்தார் பற்றிய குல வரலாறு ஒன்று இப்படி விளக்கம் தருகிறது. வேளாளர் அல்லது வெள்ளாளர் என்பது வெள்ளம் + ஆள்பவர் என்பதன் கூட்டுப் பெயர். வெள்ளம் என்பது நீராகும். நீரை வினாக்காமல் ஆள்பவர்கள், அதாவது நிர்வகிப்பவர்கள் என்இ): பொருள். அதே போல, கார்காத்தார் என்பதும் நிலைபெற்ற நினைவுகள் 3; 23
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/23
Appearance