அவள் திரும்புவதற்குச் சிறிது நேரமாகிவிட்டது. ஐயோ, புள்ளெ எப்படி இருக்குதோ - துரங்குதோ, முழிச்சிட்டுதோ என்று முனகியபடி, பரபரப்போடு வீடு திரும்பினாள். குழந்தை வீரிட்டு அழும் சத்தம் கேட்டது. என்னவோ ஏதோ என்று பதறியடித்து வேகமாக நடந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்து, தொட்டில் பக்கம் பார்த்தவள் அந்தப் பாம்பு படமெடுத்தபடி தொட்டில் அருகில் நின்று, தொட்டிலை படத்தினால் தொட்டு மெதுவாக ஆட்டிக்கொண் டிருந்தது. அழும் குழந்தையை தேற்றுவதற்காக அது தொட்டிலை ஆட்டுகிறது என்ற எண்ணம் குழந்தையைப் பெற்றவளுக்குத் தோன்ற வில்லை. பாவிப் பாம்பு பிள்ளையை கொத்துவதற்குத்தான் இப்படிச் செய்கிறது, அதனால் தான் பிள்ளை பதறி அழுகிறது என்று அந்தத் தாய் கருதினாள். கோபாலா, என் பிள்ளையை காப்பாத்து என்று கூவியபடி, அவசரமாக வந்து, இடுப்பிலிருந்த தண்ணீர்க்குடத்தை வேகமாக இறக்கிவைத்து விட்டு, தொட்டிலுக்குப் பாய்ந்தோடி பிள்ளையை பதற்றத்தோடு வெளியே எடுத்தாள். குழந்தைக்கு எதுவும் நேரவில்லை என்று உறுதி செய்து கொண்டதும், அதை மறுபடியும் தொட்டிலில் இட்டுவிட்டு, தனது ஈரச் சேலையை மாற்றப்போனாள். பிறகு குழந்தைக்குப் புகட்டுவதற்காக ஒரு தம்ளரில் பாலும், பாலாடையும் எடுத்து வந்து தொட்டில் அருகே உட்கார்ந்தாள். பிள்ளையை மடியில் அமர்த்தியபடி அதற்குப் பால் கொடுக்கலானாள். அவள் வந்ததும் பாம்பு தனது இடத்துக்குப் போய்விட்டது. அத்தனை நேரமும் அவள் வாய் ஆங்காரச் சொற்களை துப்பிக் கொண்டே இருந்தது. நாசமாப் போற பாம்பு நடுவிட்டிலே வந்து இருந்து கொண்டு எல்லாரையும் பயப்படுத்துதே. இந்தப் பாம்பு எப்ப தான் ஒழியுமோ? ஒருவேளையைப் போல ஒரு வேளை இருக்குமா? அது பாம்புப்புத்தியை என்றைக்காவது காட்டாது என்று எப்படிச் சொல்லமுடியும்? அறியாப் பிள்ளை இருக்கிற வீட்டிலே இப்படி நல்ல பாம்பு சுத்திச் சுத்தி வந்தா, பிள்ளை பயப்படாமல் இருக்குமா? பாம்பு தான் பிள்ளையை கொத்தாமல் இருக்குமா? இந்தப் பாம்பு வீட்டை விட்டுத் தொலைஞ்சால் தான் நிம்மதியா வாழமுடியும். இந்த விதமாக அவள் புலம்பிக் கொண்டிருந்தாள். அப்போது நிலைபெற்ற நினைவுகள் 38 43
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/43
Appearance