வல்லிக்கண்ணன் x 7 இல்லாதவர்களாக, வேலை தேடும் வேலையிலேயே காலத்தைக் கழிப்பவர்களாக அதனால், பெற்றோரின் பெரியவர்களின் குறைகூறல்களுக்கும் பழிப்புக்கும் ஆளாகிறவர்களாக நேரிடுகிறது. அவர்கள் விரக்தியும் மனக்கசப்பும் அடைந்து வாழ்க்கையை வெறுக்கிறவர்களாகி விடுகிறார்கள். நான் மாணவனாக வளர்ந்த காலத்தில், நீ பிற்காலத்தில் என்ன ஆகப் போகிறாய் என்று மாணவர்களை எந்த ஆசிரியரும் கேள்வி கேட்டுப் பதில் பெற்றதில்லை. நான் எதிர்காலத்தில் இப்படி இப்படி வளர்ந்து வாழ வேண்டும் என்று இயக்கி நெறிப்படுத்துவதற்கு என் தந்தை உயிரோடிருக்கவில்லை. நான் ஆறாம் வகுப்பு படித்தபோதே என் அப்பா இறந்து போனார். என்னையும், என் அண்ணன்களையும் தம்பியையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்; எல்லோரும் படித்து ஏதாவது ஒரு வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும்; அப்போது தான் குடும்பம் நல்ல நிலை அடைய முடியும், கடன் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்றுதான் அம்மா எண்ணினாள். கஷ்டப்பட்டு எங்களைப் படிக்க வைத்தாள். அம்மாவின் ஆசை முழுமையாக நிறைவேறிற்று என்று சொல்வதற்கில்லை. என் பெரிய அண்ணன் கலியாணசுந்தரம் தனக்கு படிப்பு வரவில்லை என்று சொல்லி எட்டாவது வகுப்புடன் தனது கல்விப் பயிற்சியை நிறுத்திக் கொண்டார். சுகவாசியாக வீட்டோடு இருப்பதையே அவர் என்றும் விரும்பினார். என் தம்பியும் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத சுதந்திரப் பறவையாக வாழவே ஆசைப்பட்டான். அதனால் அவனும் ஏழாவது வகுப்புடன் தனது படிப்பை முடித்துக் கொண்டான். அண்ணன் கோமதிநாயகமும் நானும் தான் பள்ளி இறுதி, தேர்வு முடியப் படித்து சான்றிதழ் பெற்றோம். கிராமங்களில், எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்களை பெரிய பத்து படித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் அது. ஏனெனில், பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு என்ற ரீதியில் கணக்கிடப்படாத காலம். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு முதல் பாரம் (ஃபர்ஸ்ட் ஃபார்ம்) இரண்டாம் பாரம் (செகண்ட் ஃபார்ம்) என்ற தன்மையில் கணக்கிடப்பட்டிருந்தது. அப்படிப் பார்க்கையில் 'ஐந்தாம் பாரம் (பிஃப்த் ஃபார்ம்) என்பது பத்தாவது வகுப்பு ஆகிறது. ஆயினும்,
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/8
Appearance