உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 * நிலைபெற்ற நினைவுகள் ஆறவாது பாரம் தான் (சிக்ஸ்த் ஃபார்ம் பத்தாம் கிளாஸ் என்று கனத்திடப்பட்டது. ஆகவே, ஒவ்வொருவரும் இரண்டு பத்தாம் வகுப்புகளில் படிக்க வேண்டியிருந்தது. அதனால் பெண்களும் சாதாரண ஜனங்களும் ஐந்தாவது பாரத்தை சின்னப் பத்து’ என்றும், ஆறாம் பாரத்தை பெரிய பத்து’ என்றும் குறிப்பிடுவது வழக்கமாயிற்று. பத்தாம் வகுப்பு படித்துத் தேறியவர்கள் ஏதாவது ஆபிசில் அல்லது மில்லில், அல்லது தனியார் நிறுவனங்களில் குமாஸ்தா வேலைக்குத் தான் போக முடியும். எங்கள் நலனில் அக்கறை கொண்ட சில உறவினர்கள் எங்கள் இருவருக்கும் வேலை பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொண்டார்கள். உரிய பலன்தான் கிடைக்கவில்லை. இந்த நிலைமையில்தான், நெருங்கிய சொந்தக்காரர் ஒருவரின் சிபாரிசு காரணமாக, அரசு வேளாண்துறை செயல் விளக்க அலுவலர் பணிமனையில் (கவர்ண்மென்ட் அக்ரிக் கல்சுரல் டிமான்ஸ்ட்ரேட்டர் ஆபீஸ்) ஒரு குமாஸ்தா வேலை கிடைத்தது எனககு. அந்த வேலை கிடைத்து, நான் வீட்டைவிட்டு வெகு தொலைவில், இராமநாதபுரம் ஜில்லா (அப்பொழுதெல்லாம் "ஜில்லா தான். மாவட்டம் என்ற சொல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை) பரமக்குடியில் வேலை பார்க்கச் சென்றேன். என் அம்மா நல்ல காலம் பிறந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைந்தாள். அவள் சந்தோஷம் நான்கு வருடங்கள் கூட நீடிக்கவில்லை. இராமநாதபுரம் - பரமக்குடியில் இரண்டு வருடங்கள் பணி புரிந்த பிறகு, திருநெல்வேலி ஜில்லா பூரீவைகுண்டம் ஊருக்கு மாறுதல் பெற்று நான் வந்தேன். அதற்கிடையில் நான் கதைகள், கட்டுரைகள் எழுதும் ஆர்வம் பெற்று, அந்த ஆற்றலை வளர்த்துக் கொள்வதில் தீவிர வேகம் கொண்டிருந்தேன். அலுவலக அதிகாரிக்கும் எனக்கும் ஒத்துப்போகாததால், ஒன்றரை வருடங்களிலேயே நான் அந்த வேலையைத் துறந்து வெளியேறினேன். ஆகவே, எனது அரசாங்க உத்தியோக காலம் மூன்றரை வருடங்கள் தான். பெரிதாக ஆசைகள் வளர்த்து வந்த என் அம்மாவுக்கு என் செயல் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. மிகுந்த ஏமாற்றமும் கூட என் அண்ணன் கோமதிநாயகம் திருநெல்வேலியில் ஒன்றிரண்டு மெடிக்கல்ஷாப்”களில் வேலை பார்த்து, கசப்பான