நிழல் முகங்கள் 3
நேரச் சில்லரைச் சண்டை. இந்தியும் தமிழும், தெலுங்கும், மராத்தியும், ஆங்கிலத்திற்குத் தாதிகளாகி, ஆங்காங்கே ஒலமிட்ட பல்மொழிக் குரலோசை. கடைசி நிமிடக் கைமுத்தங்கள். கண்ணிர் வெளிப்பாடாக மாறிய இறுதிநேர வழியனுப்பு உபசாரங்கள். அப்போது
வடக்கே போகும் ரயிலிலிருந்து தெற்கே போகும் ரயிலின் வயிற்றுப் பெட்டியான - சாப்பாடு சமைக்கும் தனிப் பெட்டிக்கு அருகே, பிளாட்பாரத்தில், பிடரியில் கை வைத்தபடி ஒரு சிறுவன் நின்றான். அவனது தோற்றத்தையும், அழுக்கடைந்த வேட்டியையும் பார்த்த பலர், அவனை விட்டு ஒதுங்கியபடியே நடந்தார்கள். இப்போது ஒரு முண்டாசுப் பயில்வான் அவனருகே வந்தான். சின்ன வயதுதான் என்றாலும், அந்த முண்டாக அவனை தாதாவாக காட்டியது. பையனின் கழுத்தை, பாம்பு தவளையை பிடிப்பது போல் தனது ஒரு கைக்குள் வைத்துக் கொண்டே, அவன் முகத்தை அங்குமிங்குமாய் ஆட்டியபடியே கேட்டான்.
“ஏண்டா. அந்த ரயிலுல இருந்து இறங்கினே. சோமாறி? நான் படிச்சப் படிச்சு பல தடவை சொன்னது, ஒன் காதுல விழவியா? இன்னைக்கு மட்டும் நீ வரல. மவனே அவ்வளவுதான்."
அந்தப் பயல், அவன் கைமுஷ்டி அளவுகொண்ட தன் முகத்தை அங்குமிங்குமாய் திருப்பி, உடம்பை வில்போல் வளைத்து, அவன் காட்டும் ரயிலை பார்க்க மறுத்ததுபோல், தென்நோக்காய் திரும்பி ஆய். ஊய். என்று தவளை போலவே ஒலமிட்டான். பிறகு அவனைப் பார்த்து, டில்லியில் பயங்கரமான குளிர் என்பதை குறிப்பால் உணர்த்துவதுபோல், கைகளை மார்பில் குறுக்காய் வைத்து உடம்பை வெடவெடப்பாய் ஆட்டிக் காட்டினான். சிறிது நேரம் யோசித்த அந்த முண்டாசுக்காரன் விரக்தியாகப் பேசுவது போல் பேசினான்.
"சரி எனக்கென்ன...? வந்தா. வராட்டா போ. சுந்தரண்ணன் டில்லிக்குப் போற ரயிலுல எஸ். 8 பெட்டியில இருக்கார். ஒன்னை கூட்டி வரச் சொன்னாரு..."
தனக்குத் தெரியாம்ல் சுந்தரம் அப்' வந்திருக்க முடியாதே என்பதுபோல், பயல் கீழுதட்டில் வெள்ளரிக்காய் விதவைகள் போன்ற பற்களை பதித்தபோது, முண்டாக கிண்டலும் கேலியுமாய் பேசினான்.
"ஒன்னை மாதிரி அவரு என்ன ஒசி கிராக்கியா? பணம் கொடுத்து, டிக்கெட் எடுத்துட்டு டில்லிக்கு வரார். ஒன்னை கையோட கூட்டி வரச்சொன்னார்."