நிழல் முகங்கள் 7
தோற்றம் கன்னங்கரேறென்ற நிறம். எண்ணெக்கருப்பு என்பார்களே நாட்டுக் கோட்டைச் செட்டியார்களின் நிறம் அது மாதிரியான மின்னுங் கருப்பனல்ல. முகம் சுழித்துப் பார்க்க வைக்கும் 'துக்கக் கருப்பு பறட்டைத் தலை.ஒடுங்கிய விழித்திரைக்குள் உள்ளோடிய கண்கள். அவன் மேனி. அந்த முண்டாசுக்காரனின் இரண்டு கால்களின் பரிமாணத்திற்கு இருக்கலாம். குழிபட்ட கன்னங்கள், நீளவாகுவான முகம். அவன் பற்கள்கூட மெலிந்து இருப்பது போன்ற தோரணை, நைந்து போன பழைய வேட்டி இடுப்புக்கு மேலே குப்பைத் தொட்டியில் கிடந்து எடுத்தது போன்ற ஒரு பனியனைப் போட்டிருந்தான். நூல் கற்றைகளை விட அழுக்கை அதிகமாகக் கொண்ட, துண்டு ஒன்றை, தோளில் தாறுமாறாகப் போட்டிருந்தான். ஒரு கையை முண்டாகக் காரனிடம் கொடுத்து விட்டு, இன்னொரு கையைக் குறுக்காக மடித்து வைத்தபடி எங்கேயோ வெறித்துப் பார்த்தான்.
இதற்குள் வழிமறித்தானும், தடகள ஓட்டம்போல் வண்டி களுக்கு வழிவிட்டும், மனிதர்களை தள்ளிவிட்டும், வழுக்கி வழுக்கி ஒடி வந்துவிட்டான். முண்டாசுக்காரனிடம் பொய்க் கோபம் போட்டுப் பேசினான்.
"அவனை விடுடா, மச்சான்."
"விட முடியாது.டா மாமா."
"டேய். அந்தோணி. சொல்றதைக் கேளுடா. டில்லிக் குளிரு அவனுக்குத் தாங்காதுடா. விட்டுத் தள்ளுடா"
'இல்லடா, பலராமா. சென்ரல் ஸ்டேஷன் ல எங்கூட டில்லிக்கு வாரதாய் இந்தப் பயல் தலையாட்டினான். இப்பக்காட்டி பால்மாறுறான். ஒரு சொல்லுல நிற்காண்டாமோ..?”
"வரமாட்டேன்னு ஒரு சொல்லுலதானே நிற்கான்.? அவனை ஏண்டா வம்பு பண்றே?"
"வம்பு நீதான் பண்றே. நீ இருக்கிற தைரியத்துலதான் பயல் எகிறினான். கொடுத்த வாக்கைக் காப்பாத்தாமல் டபாய்க்கிறான். டேய் அவனைத் தொட்டே. அப்புறம் நான் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன்."
"ஏண்டா மச்சான் கோபப்படுறே?"
"இல்லடா. மாமா எனக்கு அவன் வரணும்."
"டேய் அந்தோணி. ஏதும் சரக்கு போட்டுக்குனு பேசுறியா..? டெல்லியில இருந்துதானே நான் வாறேன். பயங்கரமான குளிருடா