8 சு. சமுத்திரம்
மச்சான். காலையில பத்து மணி வரைக்கும்கூட கண்னை மறைக்கிற பனிடா. காலு கை உருகி ஓடிடும்போல பணி. ஒன் தடி ஒடம்பு தாங்கும். இந்தப் பூஞ்சை உடம்பு தாங்குமா..?
"நான் என்ன ஒன்னை மாதிரி மூளையில்லாத முண்டமுன்னு தினைக்குறியா..? இது தெரிஞ்சுதான் பயலுக்கு பர்மா ஸ்வெட்டர் வாங்கி வச்சுருக்கேண்டா. கம்பளிகூட வாங்கியிருக்கேன்."
"சரி, அடுத்த வாட்டி கூட்டிப் போ. இப்போ வேண்டாம்."
"இந்த வாட்டி வராட்டால் அவன் எந்த வாட்டியும் வரப்படாது. டேய் நடடா."
“விட்டுடா. மாமா. பாவண்டா..."
“எதுடா பாவம்? பாவமுன்னா உனக்கு அர்த்தம் தெரியுமாடா..? நான் கிறிஸ்தவன். சொல்லுறதைக் கேளு. பைபிள் சொல்லுது. பாவத்தின் சம்பளம்."
"ஆமாடா. இந்த மாதச் சம்பளத்தை வாங்கிட்டியா..? ஒரு அம்பது ரூபாய் கொடுடா."
"இந்தப் பயலையும் என்னையும் பிடிக்காட்டால் ஐம்பதில்லை. அறுபதாய்த் தாறேன்."
"நீ ஐநூறு தந்தால்கூட டில்லிப் பனிக்கு, இந்தப் பயலை காவு கொடுக்கச் சம்மதிக்கமாட்டேன்." o
"டேய். இதுக்கு மேல பேசினே. எனக்கு நிசமாவே கோபம் வரும்."
"சரிடா. உன் இஷ்டம். குளிர்ல சாகனுமுன்னு அவன் தலைவிதி இருந்தா யாரால தடுக்க முடியும்? உன்னால மட்டுந்தான் தடுக்க முடியும். வாறேண்டா மச்சான்."
அந்தோணி, அந்தப் பயலை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்துக்கொண்டு அவனை நகர்த்தியபோது, இடையிலே ஒரு தள்ளுவண்டி வந்தது. அதற்காக இடங்கொடுத்து, பயல்மேல் போட்டிருந்த பிடியை லேசாய் தளர்த்தியபோது, அந்தப் பயல், அவன் கையைக் கடித்தான். பொய்க் கடிதான். அதில் பொங்கும் எச்சில், அந்தோணி 'அப்புக்கு பிடிக்காது என்பது அவனுக்குத் தெரியும். அதோடு விடவில்லை. அவன் வயிற்றில் மீண்டும் கீச்சு கீச்க காட்டினான். அந்தோணியின் கை, வயிற்றுப் பக்கம் போன போது, இவன் லாகவமாக தன் கைகளை விலக்கிக்கொண்டே, சென்னை செல்லும் ரயிலை நோக்கி, முழு வேகத்தோடு ஓடினான்.