உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 17

"நாக்பூருக்குத் தெற்கே எவனாவது ஸ்வெட்டர் போட்டால் அவன் அசல் எருமை மாடுன்னு அர்த்தம்."

உல்லன் ஸ்வெட்டரும், கம்பளிக் கோட்டும் போட்டிருந்த அந்த இரண்டு பெண்களும் திடுக்கிட்டார்கள். ஸ்வெட்டர் போடுவதே எருமை மாட்டுத்தனம் என்றால், அதோடு கோட்டையும் சேர்ந்து போட்டால், அது எதில் சேர்த்தி? அவர்களுக்குச் சந்தேகம். ஒருத்தி, லேசாய்ச் சிரித்தபடியே கோட்டைக் கழட்டப் போனாள். அது ஜாக்கெட்டோடு சேர்ந்து வரப்போனபோது, இன்னொருத்தி அவசர அவசரமாகத் தடுத்தாள்.

பலராமன், தான் கழட்டிப் போட்ட ஸ்வெட்டரின் வாயை, அந்தப் பயலின் தலைக்குள் திணிக்கப் போனான். அவனோ, நரி மாதிரி ஊளையிட்டபடியே, தலையை அங்குமிங்குமாய் ஆட்டி, கழட்டிக் கொண்டான். "போட்டுக்கடா. போட்டுக்கடா." என்று பலராமன், கெஞ்சக் கெஞ்ச, பயல் மிஞ்சிக் கொண்டே போய் எழுந்து விட்டான். "அடச்சீ. என்னைச் சொல்லனும்" என்று சொன்னபடியே, அவன் கையைப் பிடித்திழுத்து உட்கார வைத்தான்.

இதற்குள், "டிரிங். டிரிங்.." என்று குளிர் பதனக் குரலெழுப்பிய படி ஒருத்தன் வந்தான். பிளாஸ்டிக் பேப்பரில், வேர்க்கடலைகளைக் கூம்பு வடிவத்தில் வைத்துக் கொண்டு இன்னொருத்தன் வந்தான். சிகரெட்டுக்களைக் கொண்டு வந்த ஒருத்தன், அந்தப் பயலைப் பார்த்து, "டேய். மாப்பிள்ளே. சிகரெட் பிடிக்கியாடா” என்றபோது பயல், தன் வாயை ரயில் பெட்டி ஜன்னலுக்கு வெளியே கொண்டு போனான்.

இறுதியாக ஒருத்தன், பிளாஸ்டிக் டம்பளர்களில் கேட்பவருக்கு எல்லாம் தேநீரை வாரி வாரி வழங்கியபடியே, காசுக் குவியல்களை ஒரு டப்பாவில் வாங்கி வாங்கிக் போட்டான். உடனே அந்தச் சிறுவன் அவனைப் பார்த்து "டி. டி. டி.." என்றான். வந்தவனுக்கு வந்தது கோபம்.

"அய்யாவுக்குக் கொடுத்தாகனுமோ? போடா, போ!'

பயல், சொன்னவனை சொரணையோடு பார்த்தான். பின்னர் உடம்பைப் பின்னியிருந்த வேட்டிக்குக் கீழே கையைக் கொண்டு போய், அந்தோணி கொடுத்த இரண்டு ரூபாய்த் தாளை எடுத்து, அவனிடம் நீட்டினான். தேநீர்க்காரன் தேள் கொட்டியதுபோல் கத்தினான்.

“Lirrrr...II, 1 geöffnruorr!”

+ * "டேய் என் பெயர் பலராமன். பல்ராமனில்ல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/30&oldid=588215" இலிருந்து மீள்விக்கப்பட்டது