உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 21

களுக்கு அடைக்கலம் கொடுத்த மனிதரைப் பற்றிச் சொல்லும் போது, காது கொடுக்க மறுக்கறது - அந்தப் பிள்ளைகளை பெத்துப் போட்டுட்டுப் போனாள்களே அந்தப் பெத்தவங்க செய்த காரியத்துக்குச் சமம். நம்மால நல்லதுதான் செய்யமுடியல, நல்லது செய்தவர்களைப் பத்தி நல்லவங்க சொல்வதை, நல்ல விதமாய்க் கேட்கணும்."

நவாப்ஜான், இடைச் செருகலாய், "ஏண்டா சோம்பேறி, மணி சார் கூட ஒட்டிக்கவா பார்க்கிறே? நீ நல்லவன்னால் உலகத்துல கெட்டவன்னு எவனுமே இருக்க மாட்டான் கண்ணு."

பல ரா ம ன் , ப தி ல டி .ெ கா டு க் க ப் போன போது , இளம்பெண்களில் கல்யாணம் ஆகாத காஞ்சனா, அவசரமாய்ப் பரபரப்பாய்க் கேட்டாள்.

"ஆமா... ஏழு பிள்ளைங்களை அனாதைக் குழந்தைகளாய் எடுத்திருக்காரே. பெற்றவள்களுக்கு எப்படி மனசு வரும்.?"

"இவளுங்கப் பெத்தவங்க இல்ல. ஏதோ ஒரு சந்தோஷத்துல எதிர்பாராமக் கிடைச்ச சீமை. சந்தோஷமா அனுபவிச்சிட்டு, அப்புறம் பிறக்கிற பிள்ளைகளைத் தள்ளுரவள்கள். இவள்கள் தாய்களில்ல; நாய்கள். நாய்கள் கூடக் குட்டிகளை நல்லாத்தான் காப்பாத்துது."

"சரி, அவள்கள் கிடக்கறாக, குழந்தைங்க எங்கெல்லாம் கிடச்சுதாம்?”

"நடுப்பகல்ல. பிளாட்பாரத்துல, தேநீர் விடுதியில. பயணச் சீட்டு கொடுக்கிற இடத்துல, ரயில் பெட்டியில..."

"அப்புறம் வேற எங்கெல்லாம்.?

கல்யாணமான கல்யாணி, காஞ்சனாவை ரகசியமாக எச்சரித்தாள்.

"இதுக்கு மேலக் கேட்காதடி."

"கேட்டா என்னவாம்?"

"தி என்னவோ பிள்ளைப் பெத்துத் திருட்டுத்தனமாய் கை விடுறதுக்கு முயற்சி செய்யப் போறேன்னு நினைக்கப் போறாங்க."

"சி, போடி"

அந்தப் பெண்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கண்டறிய முயற்சித்து தோல்வி கண்ட சீனிவாசன், மூக்கைத் தடவினான்

கி, 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/34&oldid=588227" இலிருந்து மீள்விக்கப்பட்டது