உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 27

கேட்கப்போன சிலரையும் இவள் யாரோ, என்ன தப்பு செய்தாளோ, இவளுக்காக நம்ம உயிரும் போகணுமா! என்று இரக்கத்தை கழுத்த நெறிச்சுக் கொன்னுட்டாங்கப்பா. இவ்வளவு பெரிய கூட்டத்தில ஆளு இல்லாத அனாதையாய் ஆயிட்டேன்பா. நீ கூட அந்தப் பாவிப் பயலுக நோட்டம் பார்க்க அனுப்பின ஆளா இருப்பியோன்னு சந்தேகப்பட்டுத்தான் இந்த ரயிலுல இருந்து கீழே குதிக்கப்போனேன். என்னை மன்னிச்சிடுப்பா. நீயாவது நான் இருக்கேன்னு சொன்னியே அது போதும் எனக்கு. இந்த சந்தோஷத்திலேயே அந்தப் பாவிங்க கையில சம்மதத்தோட கூட சாவேன்.”

அவள், அந்தப் பையனை மீண்டும் அணைத்துக் கொண்டாள். நீரில் மூழ்குப்வர்கள் ஒரு துரும்பைக்கூட ஆதாரமாகப் பிடிப்பார் களாமே. அப்படிப்பட்ட பிடியல்ல. அதற்கும் மேலான பிடி: அன்பென்னும் கைக்குள் அகப்பட்ட பிடி

அந்தப் பையன் அவளிடமிருந்து விடுபடாமலேயே . கால்களைத் தூக்கிக் குதிகால்களில் நின்றபடி அவள் கண்ணிரைத் துடைத்தான் இந்த அன்புப் பிரவாகத்தின் இன்ப அதிர்ச்சியில் அவள் அந்தப் பயலின் பூஞ்சை உடம்பு வலிக்கும்படி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கு இருபத்தி நான்கு வயது இருக்கலாம். ஒல்லியன்றோ அல்லது தடிப்பு என்றோ சொல்ல முடியாத மேனி, சாம்பல் பூத்த கண்கள்தான். ஆனால், அதற்குள் ஏதோ எரியப் போகிற ஜோதி போன்ற ஒரு தோற்றம். வட்டமும், நீளவாகுவும் சேர்ந்தமைத்த முகம் தரைக்குப் பளிங்கு போட்டது போல் அந்த முகத்தில் ஏதோ ஒரு அழகு மின்னியது. காமத்தைத் துாண்டும் கவர்ச்சி அல்ல. கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் ஒருவித கம்பீரம். அந்த பீதியிலும் நிதானத்தோரணை. சில பெண்களுக்கு உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் ஒட்டி வைத்தது போல் துருத்திக் கொண்டு நிற்கும். ஆனால், இவளுக்கோ ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற அமைப்பு. அந்த சோகப் பார்வையில் கூடப், பயல் ஒரு சுகப் பார்வையைக் கண்டான்.

அவள் மீண்டும் அங்குமிங்குமாக நடக்கப் போனாள். பயல் நடுவழியில் அவள் முன்னால் போய் நின்றான். அவளின் இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்தபடி தன்னோடு வரும்படி மோவாயை ஆட்டினான். தேரை இழுப்பதுபோல அவளை லேசாய் இழுத்தான். அவள் பேசாமல் நின்றாள். உடனே, பையன் தானிருந்த பெட்டியைச் சுட்டிக்காட்டி அவளை ஊளையிட்டபடி இழுத்தான். இப்போ அவளும் அவன் இழுத்த இழுப்பிற்கு நடந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/40&oldid=588245" இலிருந்து மீள்விக்கப்பட்டது