நிழல் முகங்கள் 29
"கவலைப்படாதீங்கம்மா! எப்போ இந்தப் பெட்டிக்குள்ள வந்தீங்களோ, அப்பவே உங்க உயிருக்கு ஆபத்தில்லன்னு அர்த்தம்; எப்போ இந்தப் பய உங்களைக் கூட்டிக்கிட்டு வந்தானோ அப்பவே நீங்க எங்கள்ல ஒருத்தர்ன்னு அர்த்தம். எங்க உயிரைக் கொடுத்தாவது உங்களைக் காப்பாற்றுவோம். இல்லையாடா பலராமா? அப்படித்தானே கோவிந்து!"
"இதைச் சொல்லிக் காட்டணுமாடா? எதுக்கும் அடுத்த ஸ்டேஷன்ல நம்மளைத் தயார் பண்ணிக்குவோம்."
அரும்பு மீசை சீனிவாசன், கல்யாணமாகாத காஞ்சனாவிடம் கிசுகிசுத்தான்.
'இவள் யாரோ, எவளோ? என்ன தப்பு செய்தாளோ! இப்படிப்பட்டவளுங்க நாகரிகமான திருடிகளாக் கூட இருக்கலாம். ராத்திரிக்கு உங்க கம்மலையோ, செயினையோ பறிச்சுக்கிட்டு ஓடினா யார் பொறுப்பு? பறிச்சுக்கிட்டு போனாக்கூடப் பரவாயில்லை. நீங்க கண் விழிச்சுக் கத்தப்படாதுன்னு கழுத்த நெறிச்சுக் கொன்னுட்டுக்கூட உங்களுக்கு அழகுக்கு அழகு சேர்க்கிற இந்த நகைகளை எடுத்திட்டு ஓடிட்டால் யார் பொறுப்பு? பாத்திரம் அறிந்து பிச்சை போடணுமுன்னு ஏன் இவங்களுக்குத் தெரிய மாட்டேன்கிறது?"
மெக்கானிக் நாராயணன் இப்போது முதல் தடவையாக அந்த வாலிபனிடம் பேசினான்.
"யோவ். மண்பான்ன! நான் உன்னை அப்ப பிடிச்சே கவனிக்கிறேன். உன் மனசில நல்ல எண்ணமே வராதா? ஒருத்தரப் பார்த்தவுடனேயே எங்களால கண்டுபிடிக்க முடியும். ஏன்னா, நாங்க காலேஜ்ல படிக்காதவங்க. இதோ நிக்கறானே எங்க பயல். இவனுக்கு ஒருத்தர் எப்படிப் பட்டவங்கன்னு கண்டுபிடிக்கிற சக்தி இருக்கு. உன்கிட்ட இன்னும் அவன் முகம் கொடுத்துப் பேசல பார்த்தியர் அந்தப் பொண்ணு எப்படித் தவியா தவிக்குதுன்னுப் பாருய்யா. உனக்குக் கண் கலங்கலன்னாலும் வாயையாவது கலக்காமல் இரு வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சாதய்யா"
அரும்பு மீசைக்காரனுக்கும் ஆத்திரம் வந்தது. அது சொல்லில் தெரிந்தது.
"நான் இவங்க கிட்டதான் பேசினேன்."
காஞ்சனா, தர்மசங்கடப்பட்டாள். ஆசாமி எனக்கும் அவனுக்கும். ஏதோ இருக்கிறது மாதிரி பேசுறானே. யாராவது கொலகாரங்க வந்தா காப்பாத்தப் போறது அவங்கதான். இவன் இல்ல. காஞ்சனா அவன்'மீது வார்த்தைகள் வழியாகப் பாய்ந்தாள்