உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிழல் முகங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 33

துறைமுக அதிகாரி ஒருவர் வீட்டுக்கு வந்த அவர் மனைவிகிட்ட உங்க புருஷன் விபத்துல சிக்கிக்கிட்டார்னு சொல்லியிருக்கான். அந்த அம்மா அடிச்சுப்புரண்டு துறைமுகத்திற்கு வந்ததும் அவரோட புருஷன் கப்பல்ல இருக்கார் என்று கதை சொல்லி இருக்கான், அந்தப் பெண் கப்பல்ல ஏறியவள் ஏறியவள்தான்; வெளியில வரமுடியவில்லை. கூலித் தொழிலாளியாக ஏற்றுமதி ஆனாள். இப்படித் தமிழினம் எப்படியெல்லாமோ அலைக்கழிக்கப் பட்டது. இதனாலதான் பாரதியார்,

"நாட்டை நினைப்பாரோ எந்த

நாளினில் போய் காண்தென்றே அன்னை

விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் சங்கே

வீட்டை நினைப்பாரோ-அவர்

விம்மி விம்மி அழும் குரல்.” என்று பாடினார். தமிழ் ரத்தம் கடலைத் துளைத்து பல்வேறு பூமிகளில் விளைந்தது. இந்த ரத்தபாசம் வெளிநாட்டுத் தமிழர்கள் எல்லோரிடமும் இருக்கிறது. இதே பாசம் இங்க் இருக்குமுன்னு நம்பித்தான் எல்லோரும் நினைக்கிறாங்க இந்தப் பின்னணியில் என் கதையைச் சொல்லப்போறேன்.

"திருநெல்வேலியில் தூக்குப்போட்ட மூதாட்டியோட கதை மாதிரி தூத்துக்குடியில ஒரு குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்டதே அந்த மாதிரியான கதைதான் என் கதை. அப்போ தமிழனும், தமிழச்சியும் தமிழ்நாட்டுல இருந்து போறோமேன்னு கப்பல்களில் தவிச்சாங்க. இப்ப என்னை மாதிரி பெண்கள் தமிழ்நாட்டுக்கு வந்துட்டேனேன்னு தவிக்கிறேன். சரி என்னோட கதைக்கு வாரேன்; இதுக்குமேல சுற்றி வளைக்காமலே சொல்லப் போறேன்."

இ2

அந்த ரயில், ஏதோ சோககீதத்தை இசைப்பதுபோல, ஒரு ஆற்றுக்கு மேலேயுள்ள வராவதி பாலம் ஒன்றில் அது பாய்ந்த போது, அந்தப் பாலம், இதன் சோகத்திற்கு ஒப்பாரியிட்டு மாரடிப்பது போலிருந்தது.

அவள் பட்ட துன்பக் கதையைக் கேட்க, ரெயில்வே தொழிலாளர்களும் டில்லிப் பெண்களும் இதர பயணிகளும் உன்னிப்பானார்கள். நவாப்ஜான், இரண்டு காதுகளுக்கும் பின்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/46&oldid=588264" இலிருந்து மீள்விக்கப்பட்டது