உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s நீத்தார் வழிபாடு

திருச்சிற்றம்பலம்

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு Mandhíram aavadhu neeru Vaanavar mēladhu neerru

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு Sundharam aavadhu neerru thudhikkap paduvadhu neerru தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

Thandhiram aavadhu neerru samayath thil ulllladhu neerru செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே. Sendhuvar vaay umaipangan thiru aala vaayaan thiruneerrē

திரு ஆலவாய் என்ற மதுரையில் உள்ள சிவபெருமான் சிவந்த வாயை உடைய உமையை ஒரு பங்கில் கொண்டவர்; அவருக்கு உரியது திருநீறு. இத்திருநீறு மந்திரம் ஆகி இருப்பது,- தேவர் கள் தம் உடம்பில் மேல் பூசிக்கொள்வது-அழகாக இருப்பதுஎல்லோரும் துதிப்பது - ஆகமப் பொருளாக விளங்குவது -சைவ சமயச் சின்னமாக இருப்பது

The Lord of Thiru-Aalavai has the red-lipped Uma on one side of His Form. His Sacred Ash—becomes a mystic one—is seen smeared on the bodies of the celestials—is praised by one and

all—is the sum and substance of the Aagamas—and is the emblem of the Godly path.

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு Muththi tharuvadhu neer ru munivar annivadhu neerru சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

Saththiyam aavadhu neerru thakkõr pugazhvadhu neerru பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு Paththi tharuvadhu neerru parava iniyadhu neerru சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே Siththi tharuvadhu neerru thiru aalavaayaan thiruneere

திருநீறு மோட்சத்தைத் தருவது; முனிவர்கள் பூசிக்கொள்வது, எப்பொழுதும் உள்ளது; சிவனடியார்கள் புகழ்வது; பக்தியைக் கொடுப்பது: வாழ்வதற்கு இனிமையானது; (அஷ்டமா) சித்திகளைத் தருவது-திரு ஆல்வாயில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானின் திருநீறு ஆகும்.