பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

கண்ட மக்களைப் பற்றியும், கதையளப்பார்கள். பெரிய பணக்காரர்கள் வீட்டுக்கு அவர்கள் விருந்துக்குப் போய் வந்ததைப் பற்றியும் அங்கு வந்திருந்த இளவரசன் ஒருவன் தங்களைக் கவனித்ததைப் பற்றியும் பெருமையாகச் சொல்லுவார்கள். அதையெல்லாம் கேட்டுப் பாவம் சந்திரிகா பெருமூச்செறிவாள். அவளை ஒரு வேலைக்காரியைப் போல் நடத்தியதோடு அவளை முன்னைக் காட்டிலும் மோசமாகவும் வெறுப்பாகவும் அக்காள்கள் இருவரும் நடத்தலானார்கள்.

ஒரு நாள் மாலை சந்திரிகா அடுப்பருகில் உள்ள கரிக்குவியலின் மேல் உட்கார்ந்திருந்தபோது கரித்துண்டுகளின் நடுவில் ஒரு சிறு சாவியைக் கண்டாள். அது கரிப்பிடித்துப் பழையதாய் இருந்தது. ஆனால், தேய்த்துக் கழுவிப் பார்த்த்போது சுத்தமான தங்கத்தினால் செய்யப்பட்ட சாவியாகத் தோன்றியது. உடனே சந்திரிகா அம்மாளிகை முழுவதும் ஒடியோடி அது சேரக் கூடிய பூட்டு எங்க்ேயிருக்கிறதென்று தேடினாள்.

கடைசியில் அவள் ஒரு பெட்டகத்தை கண்டுபிடித்து அதைத் திறந்து பார்த்தபோது அதற்குள், நகைகளும், வைரங்களும், பலவகையான உடுப்புகளும், சேலைகளும் இருப்பதைக் கண்டாள். தான் கண்டு பிடித்ததை அவள் தன் சகோதரிகளுக்குச் சொல்லவில்லை. மறுநாள் அவர்கள் மாளிகையை விட்டு வெளியேறும்வரை சந்திரிகா காத்திருந்தாள். பிறகு அவள் அந்தப் பெட்டகத்திலிருந்து மிகவும் அழகான டைகளையும், நகைகளையும் எடுத்து அணிந்து கொண்டாள். அப்போது அவளிடம் ஏற்பட்ட ஒரு மினு மினுப்பு, சூரியனும், சந்திரனும் சேர்ந்துவந்தால் ஏற்படக்கூடிய ஒளியைக் காட்டிலும் மிகப் பிரகாசமாக இருந்தது. பிறகு அவளும் அடுத்த நகரத்திலுள்ள கலைமாளிகையின் விருந்துக்குச் சென்றாள். அவள் அணிந்திருந்த ஆடைகள் அவளை மிகவும் அழகுடையவளாக்கி விட்டபடியால் அந்த நீ.மு. - 3