உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

பூவை எஸ். ஆறுமுகம்



அம்பலத்தரசனின் இரக்க நெஞ்சை மேலும் உருக்கியிருக்க வேணும்!" என்று குறுக்கிட்டான் பூமிநாதன் இரட்டைக் குரல் ' மாறிவிட்டது. அப்பேச்சு அம்பலத்தரசனுக்குப் புல்லரிப்பை உண்டு பண்ணியது. அவன் கண்கள் கலங்கின; இதயம் மேலும் நெகிழ்ந்தது. இரக்கம் என்பதே ஒரு பெருஞ் சோதனைதான். அதனால்தான் எனக்கென்று இந்தச் சோதனையை விதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றதா? தெய்வமே, அந்த அபலை ஊர்வசியைக் காப்பாற்று!' ரோட்டரி இயங்கிய சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இனியும் அவனால் காலந்தாழ்த்த இயலாது. ஆகவே, புறப்பட்டான். "இருங்க; நம்ம டாட்ஜிலேயே போகலாம். வழியில் உங்களை ட்ராப் செய்கிறேனுங்க!" என்று மொழிந்தான் பூமிநாதன். பவ்யமாக வேண்டினான் அவன், பூமிநாதனின் உபசாரம் அவனுக்குத் தலைக் கிறுகிறுப்பை உண்டாக்கியது. தலைவலிபோய் திருகுவலி வந்த கதையாக ஆகிவிடுமே, பூமிநாதனோடு புறப்பட்டால்? அறையின் வாசலில் இறக்கி விட்டுவிட்டு, அத்துடன் போக மாட்டாரே பூமிநாதன்! அறைக்கும் வந்துவிடுவாரே! வந்தால், அங்கு அடைக்கலப் பொருளாக இருக்கும் குமாரி ஊர்வசியையும் அல்லவா அவர் பார்க்க நேரிடும்? ஊஹூம், வேண்டாம் இந்தத் தலைவேதனை! என்னைப் பற்றி அவர் ஐயப்படுவது இருக்கட்டும்! ஆனால், ஊர்வசியின் நிலைமையும் அல்லவா தர்மசங்கடமாகிவிடும்!.... ஊஹகும், வேண்டாம் இந்த விஷப்பரீட்சை!" பூமிநாதன் பற்றவைத்த சிகரெட்டுடன் கிளம்பத் தயாராக எழுந்து காரின் அருகே வந்து, “புறப்படலாமா லார்?" என்று கேட்டான். சட்டையைத் தூக்கிவிட்டபோது, அவனது மார்புப் பகுதியில் பெரிய ரத்தத் தழும்பொன்று தெரிந்தது. காலம் கடந்திட்டுது. நீங்க புறப்படுங்க. நான் காலி'யை ஒரு க்ளான்ஸ் பார்த்திட்டுத்தான் வர வேணும், "என்று சொன்னான் அம்பலத்தரசன். பொய். -