உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பூவை எஸ். ஆறுமுகம்



போன மனிதர் திரும்பி வந்து, "இதுக்கும் உங்க தஞ்சாவூர் தானோ?" என்று கேட்டுவைத்தார். - இப்போதும் அவர் தம் கேள்விக்குறியின் விடையையும் சொல்லாமல் சொல்லிவிடவே, இப்போதும் அவனுக்கு விடையிறுப்பதில் ல வ லேசமுமம் கஷ்டம் உண்டாக வில்லை. "ஆமாங்க!" என்றான். "நாங்க ஆவணியிலே தஞ்சாவூர் போவோம். அப்போது மறந்துவிடாமல் உங்களுக்குக் குடமிளகாய் ஒரு மூட்டை வாங்கி அனுப்பி வைச்சிடுறோமுங்க, ஐயா!" என்று சிரிக்காமல் கொள்ளாமல் செப்பினாள் ஊர்வசி. "தங்கச்சிக்கு ஜோஸ்யம் கூடத்தெரியும் போல இருக்குது... நான் மனசிலே நெனைச்சதைக் கனகச்சிதமாச் சொல்லிட்டுது.... மறந்திடப்பிடாது!..." என்று தேன் குடித்த நரியாக நின்றார் குஞ்சித பாதம். ஒரு மூட்டை குட மிளகாய் ஒ சி யில் கிட்டிவிடுமென்று மனப்பால் குடித்தாரோ, என்னவோ? "மறந்திட மாட்டோம்!" என்று. இருவரும் ஒரே குரலில் அவருக்கு அபயம் அளிக்கவே, பல்லெல்லாம் தெரியக் காட்டி, அதாவது, விழுந்து தொலைத்த மூன்று பற்கள் போக, மிகுந்திருந்த பற்களையெல்லாம் காட்டிச் சிரித்துவிட்டுத் தான் அவர் தமது குஞ்சர மேனியைக் கீழே இறக்கிக் கொண்டு மறையலானர்! அவள் கண்கள் சிரித்துப் பழகியவை. அவன் உதடுகள் சிரித்துப் பழகியவை. பாலசூரியன் ஏறுமுகம் காட்டினான். - மாடிக் கைப்பிடிச்சுவரருகே இருந்த தொட்டித் துளசியின் தளிர்களுக்கு இளம் கிரணங்கள் முத்தம் கொடுத்துப் பழகிக் கொண்டிருந்தன. - - ரேடியோவின் வாயை அடைத்தாள் ஊர்வசி. "நம் திட்டத்தைப் பத்தி நீங்க சொல்லலே. ஆகையாலே நானே சொல்லிடுறேன். இப்போ நான் என்னோட ஜாகைக்குப் போகவேனும், என்னை ராத்திரி பூராவும் காணாமல், என்னைப்