உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும்போது, அவர்கள் வெறும் கதை மாந்தர்கள் என்ற நினைவே யற்று. அவர்களை உண்மை மனிதர்கள் என்றே கருதி உறவாடத் தொடங்கிவிடுகிறோம் நாம், 'விதியின் ஆணை'யை பூவை உணர்ந்து போற்றுவதாகத் தெரிகிறது; வாழ்க்கை என்னும் சதுரங்க விளையாட்டில், விதி மனிதர்களைப் பகடைக் காய்களாக மாற்றிவிடுகிறது என்ற கருத்து அவரது கதைகளில் தொனிப்பொருளாக ஒலிக்கிறது. 'அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்ற உண்மை இக்கதையின் தத்துவமாக ஓங்கித் திகழ்கிறது. கதை சொல்லும் கலை பூவைக்குக் கைவந்த ஒன்று. ஏறத்தாழ நூற்று இருபது பக்கங்கள் கொண்ட இக்கதையை ஒரே மூச்சில் படித்துவிடுகிற வகையில், விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறார். இக் கதையின் உருவும் உத்தியும் போற்றத் தக்கன. பூவையின் உயிர்த்துடிப்பான மொழி நடையால் இந்நாவல் மேலும் சிறக்கின்றது. தனித்த வேகமும் புனைவியற் பாங்கும் கொண்ட அவரது நடையின் மாயக் கவர்ச்சியில் யாரும் மயங்காமல் இருக்க முடியாது. பொருளையும் மறக்கச் செய்து, நம்மை அப்பாலுக்கப்பால் இழுத்துச் சென்று விடுகிறது அவரது மொழி நடை பூவையிடத்தில் காணப்படும் இந்நிறைவே, சில சமயங்களில், அவருடைய குறையாகவும் அமைந்துவிடுகிறது என்பது என் எண்ணம். மொத்தத்தில், நீ சிரித்த வேளை என்ற இந்நாவலைப் படித்து முடித்ததும் எனக்குத் தோன்றுகிற எண்ணம் இதுதான். நீ சிரித்த வேளை தமிழுக்குக் கிடைத்த ஒரு புதுப்புதையல். தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையைத் தூண்டிவிடும் ஒரு புரட்சிப்புயல். தமிழுலகம் இதைப் பெரிதும் வரவேற்றுப் போற்றும் என்பது உறுதி. இதைப் படைத்துக் கொடுத்ததற்காகப் பூ வைக்குத் தமிழுலகம் பெரிதும் கடன்பட்டிருக்கிறது. - அன்புடன் எழில்முதல்வன் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீ_சிரித்த_வேளை.pdf/6&oldid=792730" இலிருந்து மீள்விக்கப்பட்டது