நூலினைப் பயன்பெற ஆக்குதல் என்பது நூலகத்திற்குப் புதிய நூல்கள் வந்தவுடன் பின்வரும் முறைப்படிச் சரிபார்த்து, ஒழுங்குபடுத்திய பின்னர் பிறர் படிக்கும் வண்ணம் நூலகத்தில் அவற்றை வைத்தலாகும்.
1. விலைச் சீட்டினைச் சரிபார்த்தல் (Checking off)
புதிய நூல்கள் விற்பனையாளரிடமிருந்து வந்ததும் முதலில் அவை நாம் அனுப்பச் சொன்ன நூல்கள் தானா என்பதைச் சரிபார்த்தல் நூலகத்தாரின் முதற் பணியாகும். மேலும் நாம் வேண்டிய பதிப்பினை அனுப்பியுள்ளனரா என்பதையும் கவனிக்க வேண்டும். அடுத்து இப்புதிய நூல்கள் ஏற்கனவே உள்ள நூல்களுடன் கலந்து விடாதபடி மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் விலைச்சீட்டின்படி அதில் கண்டுள்ள நூல்கள் எல்லாம் வந்துள்ளனவா, ஒவ்வொன்றிலும் நாம் வேண்டிய படிகள் வந்துள்ளனவா. பதிப்பகத்தாரின் விலையும் விலைச்சீட்டில் போட்டிருக்கும் விலையும் மாறுபாடில்லாமல் இருக்கின்றதா என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். நூல்களைச் சரிபார்க்குங்கால், நூலக அலுவலர் இருவர் கீழே கண்டுள்ளபடி சரி பார்த்தல் மிகவும் நல்லது காலமும் வீணாகாது. ஒருவர் நாம் விற்பனையாளரை அனுப்பும்படி வேண்டிக் கொண்ட ஆணையின் படியினை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். மற்றொருவர் வந்துள்ள நூல்களை அவைகளின் தலைப்பின்