உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக ஆட்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அட்டைகளுக்குப் பதில் ஏட்டிலேயே (Register) எழுதிக்கொள்வர். அவ்வாறு எழுதுங்கால் பொருள் வாரியாகவும் ஆசிரியர் வாரியாகவும் எழுதலாம்.

8. நூலின் எண் குறித்தல் (Numbering)

இதன்கீழ், வரிசை எண்ணும், வகைப்படுத்திய எண்ணும் அடங்கப்பெறும். வகைப்படுத்திய எண்ணை முன்னர்க் கூறியது போன்று நூலின் தலைப்புப்பக்கத்தின் பின்புறத்திலும் நூல் சீட்டிலும் எழுதுவதோடு அமையாது நூலின் முதுகில் ஒட்டப்பட்டிருக்கும் வட்டச் சீட்டிலும் எழுதவேண்டும். சில நூலகங்களில் இவ்வெண்களைப் பொன் எழுத்துக்களால் பொறிப்பதும் உண்டு. இதற்கென மின்சாரக் கருவி ஒன்று உள்ளது. எல்லா நூலகங்களும் இக்கருவியினை வாங்கிப் பயன்படுத்தலாம். வரிசை எண்ணை முன் கூறியது போன்று நூல் சீட்டிலும் நூலின் தலைப்புப்பக்கத்தில் காணப்பெறும் முத்திரையிலும் எழுத வேண்டும். இவை தவிர, வரிசை எண், வகைப்படுத்திய எண், இவ்விரண்டையும் நாள் சீட்டின் தலைப்பில் அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் எழுதுதல் கட்டாயமாகும்.

9. பதிவு முறை (Process Recording)

இறுதியாக மேற்கூறிய பணிகளையும் அதைச் செய்தவர்களையும் பதிவு செய்தல் என்னும் வழக்கம் சில நூலகங்களிலே நடைமுறையிலிருக்கின்றது. இவ்விவரங்களைக் கீழ்க்கண்ட தலைப்புக்களில் குறிக்கலாம்.

1. நூலைச் சரிபார்த்தவரின் பெயர்:
2. நூலின் வடிவாக்கத்தைச் சரிபார்த்தவர்:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/46&oldid=1111779" இலிருந்து மீள்விக்கப்பட்டது