சு. சமுத்திரம்
7
பெக்டருக்கு நம்ம தமிழரசியை கொடுத்துட்டா என்ன? ஒரே பந்தலுல ரெண்டு கல்யாணம் நடத்திட்டால் செலவு மிச்சம்பாரு."
பகவதியம்மா விளக்கினாள்:
"நாங்களும் அப்படித்தான் நெனச்சோம். ஆனால் ஒரே பந்தலுல வீடு பால் காய்க்கிறதும், ரெண்டு கல்யாணமும் நடக்கப் படாதாம்..."
"அதுவும் சரிதான். ஆனால், இப்பவே பேசி முடிச்சிடுங்க. கல்யாணத்த அடுத்த வருஷம் வச்சுக்கலாம்."
அன்னக்காவடி-அனாதைக் கிழவி, அப்படிப் பேசுவது, இன்னும் நிச்சயிக்கப்படாத கல்யாணத்தின் மாப்பிள்ளையான ராஜதுரைக்கு, அதிகப்பிரசங்கித் தனமாகத் தெரிந்தது. "சரி ... எல்லாம் ஒன்கிட்டேயே கேட்டு முடிக்கோம்" என்று சொல்லியபடியே, அவளை இழுத்துக் கொண்டு போகப்போனான்.
"தொடாதடா, எனக்கு நடக்கத் தெரியும், போகும் போது ஒண்ணே ஒண்ணை சொல்லிட்டுப் போனால்தான் என் மனசு ஆறும். அதாவது, வடக்குத்தெரு ராமையா, ஒன் முஞ்சிக்காவ அவரு மவள தரல. என் தங்கம் தமிழரசியின் முகத்தைப் பார்த்துட்டு ஒனக்கு தர்ரார். மறந்துடாதடா மங்குளிப் பய மவனே."
ராஜதுரை, பாட்டியை விரைவு படுத்துவதுபோல், அவள் முதுகை லேசாகத் தள்ளியபடியே "நீ வேற... நானும் என் தங்கச்சி தமிழரசி சொன்னதால தான் ராமையா மாமா மவள கட்டப்போறேன். என் தங்கச்சிக்கு எழுதிக் கேட்டேன். அவள் சம்மதமுன்னு சொன்ன பிறகு தான் நான் சம்மதிச்சேன். சரி, சரி, எட்டி நட" என்றான்.
தமிழரசியின் அருகே இருந்த கல்யாணப் பெண்ணின் தங்கை-முன்பு பாட்டியிடம் எடுத்த எடுப்பிலேயே வாங்கிக்