உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii இரண்டாம் இயலில் இந்த மகானின் வாழ்க்கை மக்கள் இயல்பைக் கடந்த செய்திகளும் விநோதக் கதைகளும் பல்கி "மூடுபனிபோல் இருக்கும் தெளிவற்ற நூலை சுட்டப் பெறு கின்றது. கிடைத்த மூலங்கள் மூன்றும் பஞ்சாமிருதம்' போல் - அவியல் போல் - இருக்கும் நிலை காட்டப் பெறுகின்றது. இவர் புலவர்கட்கு மட்டிலும் எட்டும் புகழ்மிக்க புலவராகத் திகழ்வதைக் காண்கின்றோம். மூன்றாம் இயலில் பட்டினத்தடிகள் வரலாற்றுடன் வட மொழி - தமிழ் கலந்த மணிப்பிரவாளம்போல் பின்னிப் பிணைந்து கலந்து திகழும் பத்திரகிரியாரின் வரலாறு அமை கின்றது. இவர்தம் திருப்புலம்பலிலுள்ள பாடல்களில் பல சித்தாந்தக் கருத்துகள் கலந்து இருப்பதால் சித்தாந்த சாத்திரங் கள் தோன்றிய காலத்திற்கும் பிற்பட்டதாகக் கருதவேண்டிய நிலை பொருந்துவதாக அமைகின்றது. இவர் காலம் என்பது குறிப்பிடப் பெற்றது. நான்காம் இயலில் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவராகக் கருதப் பெறும் - நம்பியாண்டார் நம்பியின் காலத்தில் உள்ளவரான ஐந்து பிரபந்தங்கள் படைத்த பெரும் புலவர் பெருமான் பட்டினத்தடிகள் என்ற பெயருடன் திகழ்ந்த ஒருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் பிரபந்தங்களின் சிறப்புகளும் ஆராயப் பெறுகின்றது. ஐந்தாம் இயலில் பிரபந்தத் திரட்டு படைத்த பட்டினத் தடிகளின் வரலாற்றுக் குறிப்புகளும் பாடல்களின் புகழ்மிக்க சிறப்புகளும் விவரமாக ஆராயப் பெறுகின்றன. இவர்தம் பாடல்கள்தாம் மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த மாணிக்கங்களாகத் திகழ்வதும் சில பாடல்கள் அவர்கள் நாவில் நளினமாக நடனமாடுவதுமான செய்திகள் விரிவாக விளக்கம் அடைகின்றன. இந்த இரு பெரியார்களும் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வந்தவர்களே.