உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தடிகள் வாழ்க்கை வரலாறு # 9 & பில் தீண்டவும் பெற்றார். பின்னர் மதுரையை அடைந்து எம்பெருமானை வணங்கி மீண்டும் திரு வெண்காடு திரும்பினார். ' பின்னர் இவர் திருத்தில்லையை அடைந்து சிற்றம்ப லவன்மீது பல பாடல்கள் பாடி வணங்கி, தினைநகர், திருப்பாதிரிப் புலியூர், அதிகை, வெண்ணெய் நல்லூர், அண்ணாமலை அடைந்து அங்குள்ள எம்பெருமான்க ளைப் பணிந்து வணங்கி காஞ்சியை அடைகின்றார். அங்குப் பல நாட்கள் தங்கி அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான்மீது பல பாடல்கள் பாடி வழிபட்டு இருக்கும் நாளில் ஒரு நாள் நள்ளிரவில் ஓர் இல்லத்தின் வாயிலை அடைந்து பிச்சை கேட்கவே, அவ்வீட்டுக்கு உரியவன் இவரைக் கள்வன் என்று கருதி நையப் புடைத்தான். இதனைக் கண்ட அயல்வீட்டவன் இவ ரைக் கண்டு அடிகளாயிற்றே என்று உணர்ந்து இவ ரைப் பணிந்து மன்னிப்பு கேட்குமாறு அறிவுரை கூற, அவனும் அவ்வாறே அடிகளாரின் உபதேசமும் பெற் றான். பின்னர் இவர் ஆலங்காடு, காளத்தி சென்று அவ்விடங்களிலுள்ள எம்பெருமான்களைச் சேவித்து ஒற்றியூர் அடைகின்றார். அங்குள்ள எம்பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் கடற் கரை மணற்குவியலில் விளையாடிய சிறுவர்களோடு தாமும் விளையாடியபோது ஒரு மணற் கூண்டில் புதைந்து சிவலிங்க வடிவமாக முளைத்தெழுந்தார். அவ் வூரினரும் காவிரிப் பூம்பட்டினம் வரையிலுள்ள பிற ஊரினரும் இச்செய்தி கேட்டு வியப்படைந்து இவர்தம் தெய்வத் திருமேனிக்கு ஆலயம் நிறுவி பூசை முதலி யன குறைவற நடைபெற்று வரச் செய்தனர். 1. இவ்விடத்தில் அடிகள் வாழ்க்கையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் வரலாறு தொடர்கின்றது. இந்த வரலாறு பெரும் புகழ் பெற்றது. நாம் இங்கு கருதும் பட்டினத்தார் வாழ்க்கையில் இஃது இடம் பெறாது.