உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 12 # பட்டினத்தடிகள் வடிவந் தானும் வாலிபம்; மகளும் தாயும் மாமியும் படிகொண் டாரும் ஊரிலே பழிகொண் டாடல் நீதியோ? குடிவந் தானும் ஏழையோ? குயவந் தானும் கூழையோ நடுநின் றானும் வீணனோ நகரஞ் சூறை யானதே." என்பது அப்பாடல். இவர் உஞ்சேனை மாகாளம் என்ற ஊரை அடைந் தபோது, அங்கு நிகழ்ந்த செய்திகளை இந்நூலின் பத்திர கரியார் வரலாற்றில் காணலாம். அங்கிருந்து மீண்டும் திருவிடைமருதுர் திரும்பி, பல நாள் அங்குத் தங்கிப் பின்னர் திருவெண்காடு அடைந்து பின்னும் பல தலங்கள் சுற்றிக் காஞ்சி அடைந்து காமாட்சி அம்மை அருளிய உணவை உண்டு பின்னர் திருவொற்றியூரை அடைந்தார். அங்கு உள்ளம் உருகத் தக்க பல பாடல்களைப் பாடினார்; பரவச நிலையில் திளைத்தார். பின்னர்த் தெளிந்தார். அங்குத் தங்கி இருந்தபொழுது கடற்கரை சென்று பசு மேய்த்த சிறுவர்களோடு களித்து விளையாடிக் காலம் போக்கினார். ஒருநாள் அவர்கள் தம்மை மணலில் புதைத்து விளையாடிய பொழுது தம் உருக்கரந்து சிவலிங்க வடிவமாக முளைத்து நின்றார். (3) தண்டபாணி சுவாமிகளின் புலவர் புராணம்: இங்கு மேலும் சில செய்திகள் காணப்பெறுகின்றன. திருவெண்காடர் பாணர் குலத்தவரால் மந்திரோபதேசம் செய்யப் பெற்றார். பின்னர் புதல்வன் இல்லாதிருந்து திருவிடைமருதூர் வேதியரிடம் புதல்வனை வாங்கிக் 2 இந்தப் பாடல் 'பாடல் திரட்டில் காணப் பெறவில்லை.