உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 16 4 பட்டினத்தடிகள் கண்டு உண்மையை ஒராது இவனே கள்வன்; பொய் யாக நடிக்கின்றான்' என்று முடிவு செய்து பிற கள்வர்க ளைக் காட்டுமாறு துன்புறுத்தினர். காவலன் ஒருவன் கடுக ஒடிச் சென்று அரசனை அடைந்து மாணிக்க மாலையைக் காட்டி 'இக்கள்வனைத் தக்கபடி ஒறுத் தால், களவு போன பிறப் பொருள்களும் அகப்படும்” என்று கூறினான். அரசன் அவனியைத் துறந்து ஆண்டி யாக வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தமை யால், காவலன் கூற்றை நம்பினான். அக்காலச் சட்டப் படி களவுக்குக் கழுவேற்றுதல்தான் தண்டனை என்றி ருந்தபடியால், இக்கள்வனுக்கு அவ்விதமே தண்டனை வழங்குமாறு கட்டளையிட்டான் காவலன். காவலர்கள் அரசன் ஏவற்படி அவ்வாறே செய்ய முற்பட்டனர். தம்மைக் கழுவிலேற்றியதும் பட்டினத்த டிகள் நிட்டை கலைந்து உணர்வு பெற்றார். நிலை மையை உணர்ந்தார். என்செயல் ஆவது யாதும்ஒன்றும் இல்லை இனித்தெய்வமே உன்செய லேஎன்று உணரப்பெற் றேன்இந்த ஊன்எடுத்த பின்செய்த தீவினை யாது.ஒன்றும் இல்லை, பிறப்பதற்கு முன்செய்த தீவினை யோ,இங்ங் னேவந்து மூண்டதுவே. என்ற பாடல் அவர் திருவுள்ளத்தினின்றும் பிறந்தது. 'படு உடலே படு' என்று சொல்ல, அக்கணமே கழுமரம் தீப்பற்றி எரிந்தது. செய்தியைச் செவியுற்ற அரசன் தான் தவறு செய்து விட்டதை உணர்ந்து கடுக ஒடி வந்து தீக்கொழுந்தின் அருகிருந்த தவச்சுடராகிய அடிகளைக் கண்டான். கண்டவுடன் அடிகளின் 1. திருத்தலங்கள் மீது பாடியவை: (9) பொது - 22