உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரகிரியார் # 21 4 என்ற பாடலில் ஞானத்தில் கிரியை என்ற பகுதியில், பூசையை முடித்தவிடத்து வேண்டுகோளாகக் கூறும் இடத்துக் காணப்படுகின்றன. இதனால் பத்திரகிரியார் தம் பாடல் கருத்துகளையும் சொற்களையும் தத்துவப் பிரகாசத்திலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார் என்பதைத் தெளிவாக உணர முடிகின்றது. இன்னும் இப்பெரியவர் மெய்கண்ட ஞான பரம்பரையில் வந்த ஆசாரியர் ஒருவ ரிடம் உபதேசம் பெற்றிருந்தார் எனக் கருதுவதும் பொருந்தும். தத்துவப் பிரகாசம் செய்த தத்துவப் பிரகா சர் காலம் கி.பி. 1350-75 எனத் தெரிவதால், இவர் காலம் சற்றுப் பின்னதாக இருத்தல் பொருந்தக் கூடி யதே. 14-ஆம் நூற்றாண்டு இறுதிதான் இவர் காலம் என்று முன்னர் கருதியது பலவகையிலும் ஏற்புடைய தாக அமைகின்றது. பாமர மக்கள் இந்நூலை நன்கு கற்றுப் பாடிப் பயன் பெற்றுள்ளனர். இக்காரணம்பற்றி இதனுள் நூலுக்குப் பொருந்தாத பல இடைச் செருகல்களாகப் பிற்காலங்களில் சேர்க்கப் பெற்று விட்டனவாகத் தோன்றுகின்றது. அக்கால இயல்பையொட்டி மாத ரைப் பழித்தல்’ என்ற கருத்துப் படக் காணப்படும் பாடல்கள் இத்தகையனவாக இருக்கலாம். இவை யாவும் இடைச் செருகல்களேயாகும். பல பாடல் கவிதைச் சுவை ததும்பித் திகழ்கின்றன. சில பாடல்களை ஈண்டுத் தருவேன். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் துங்காமல் துங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்? (1) பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்துபெண்ணைத் தாய்போல் நினைத்துத் தவமுடிப் தெக்காலம்? (8) மன்னுயிரைக் கொன்று வதைத்துண் டுழலாமல் தன்னுயிர்போல் எண்ணித் தவமுடிப்ப தெக்காலம்? (14)