உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பட்டினத்தார் - படைப்புகள் * 27 3 நிலையில் வாழ்வினை எண்ணி அடிகள் உளம் உருகும் ஒப்பரிய திறத்தை இப்பாடலில் கண்டு நாமும் உள்ளம் உருகிக் களிக்கின்றோம். எம்பெருமானை நோக்கி அடிகள் தம் அகத்துள் புகுந்து தீமைகளையெல்லாம் அறுத்து நீக்கியருளுமாறு வேண்டுதலை, நானே பிறந்து பயன்படைத் தேன்.அயன் நாரணன்எம் கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த தேனே திருவுள்ள மாகிஎன் தீமையெல் லாம்.அறுத்துத் தானே புகுந்துஅடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே (10) என்ற பாடலில் கண்டு மகிழலாம். உடம்பைக் கப்பலாக உருவகம் செய்து அது கவிழ்ந்து அழிவதற்கு முன் எம்பெருமான் திருவருளா கிய பெரிய வடக்கயிற்றைப் பூட்டி இழுத்து அவன் திருவடியாகிய நீண்ட கரையிலே சேரச் செய்து உய்விக் குமாறு வேண்டும் பாடல் இது. அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும் கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும் இணையன பலசரக் கேற்றி வினையெனும் தொன்.மீ காமன் உய்ப்ப அந்நிலைக் கருவெனும் நெடுநகர் ஒடுதுறை நீத்தத்துப் புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப் பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந்து அலைக்கும் துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து நிறையெனும் கூம்பு முறிந்து குறையா உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும