உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 28 4 பட்டினத்தடிகள் மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம் அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையர வணிந்த தெய்வ நாயக! தொல்லெயில் உடுத்த தில்லை காவல! வம்பலர் தும்பை அம்பல வான! நின் அருள்எனும் நலந்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே! (16) உடல் ஒரு கப்பல். அதில் அறிவற்ற செய்கை, பொய்மை, கொடிய பிணிகள், துன்பத் தொகுதி ஆகிய சரக்குகளை ஏற்றிக் கொண்டு தீவினை என்னும் மீகா மன் கருப்பை என்னும் பெரிய பட்டினத்தின் துறை முகத்தை நோக்கிச் செலுத்தி வருகின்றான். அக்கப்பலை ஐம்புலன்களாகிய சுறாமீன்கள் தொடர்ந்து தாக்குகின் றன. அக்கப்பல் பல பிறப்பென்னும் பெருங்கடலில் புகும்போது துன்பமாகிய அலைப் பெருக்கினால் நிலை பெயர்ந்து அலைந்து குடும்பம் என்னும் வலிய பாறை யில் மோதுண்டு நிறை என்ற பாய்மரம் முறிய அறிவு என்னும் பாய் கிழிகின்றது. தீமையுற்ற உடலாகிய மரக்கலம் கவிழ்ந்து சிதைவுற்று அழிகின்றது. இந்நிலை எய்து முன்னே தில்லையம்பலவன் தன் திருவருளாகிய பெரிய வடக்கயிற்றைப் பூட்டி இழுத்து தன் திருவடியா கிய நீண்ட கரையில் சேரும்படி செய்வித்துத் தங்களை உய்வித்து அருளல் வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றார் அடிகள். இக்காட்சியை அற்புதமாகச் சித்திரிக்கின்றது இத்திருப்பாடல். "ஆளெனப் புதிதின் வந்த' என்று தொடங்கும் இன்னொரு பாடலில் (24) உலகத் தோற்றம் - ஒடுக்கம் பற்றி விளக்கும் அடிகளாரின் திறம் உணர்ந்து அநுப வித்து மகிழத்தக்கது இக்கருத்து கடலை அடிப்படை யாக வைத்துக் கொண்டு விளக்குகின்றார். நுரையும் அலையும் சுழற்சியும் எல்லையற்ற நீர் திவலைகளும்