உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய புலவர் கபிலர்

உலக உயர்தனிச் செம்மொழிகளுள் தலைமையானது

தமிழ்மொழி என்ற பெருமையை பெற்றுத் தந்தவர் மதுரை யில் சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்தபுலவர்பெருமக்களாவர், அப்புலவர் பெருமக்களுள் முதற்கண் வைத்து எண்ணப்படும் பெருமை மிக்க முதுபெரும் புலவர்கள் நக்கீரர், கபிலர். பரண்ர் என்ற மூவராவர். மூவருள் ஒருவர் என்ற பெயரின்ை உடைய கபிலரின் பிறப்பு வளர்ப்பு பற்றி தெளிவான செய்திகள் நம்க்குத் தெரியவில்லை. அவர் வாழ்க்கை என நாம் அறியக்கூடியன எல்லாம் அரசர் சிலரைச் சார்ந்து பாடல் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த சில நிகழ்ச்சி களேயாம். - - - -

கபிலர் காலத்தில் மலையமானாட்டை ஆண்டு வந்தவன் மலையமான் திருமுடிக்க்ாரி என்பவன். கொடையாலும் கொற்றத்தாலும் சிறந்த காரியின் புகழ் கேட்டார் கபிலர், அவன் அரசவைக்குச் சென்று அவனைப் பாடினார். புலவர்களின் வரிசை அறியாமல் அவையில் பாடிய புலவர்கள் அனைவருக்கும் ஒரே அளவான பரிசிலை அவன் தருவது கண்டு மனம் வருந்தினார். வரிசை அறியா அவன் செயல் தமக்கு மட்டுமேயல்லாமல் தம்மைப் போலவே வரிசைக்கு வருந்தும் பரிசிலராகிய பெரும் புலவர் அனைவர்க்குமே இழிவாகுமே என்று கருதினார். உடனே புலவர் காரியை நெருங்கி,