இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குடி யிருக்கக் கோயில்!
கொரித்துத் தின்னப் பழங்கள்!
கொஞ்சிக் கொஞ்சி மகிழக்
குட்டி போடும் வெளவால்!
பறக்கத் தெரிந்த போதும்
பறவை யல்ல வெளவால்
இறக்கை போலத் தோலை
விரித்துப் பறக்கும் வெளவால் !
இருட்டு மண்ட பங்கள்
இறைவன் ஆலயங்கள்
குருட்டு வெளவால் தொங்கிக்
கொண்டிருக்கும் இடங்கள்!