இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புளிய மரத்தில் புளியிருக்கும்
முனியிருக்காது!
புதுக் குளத்தில் நீரிருக்கும்
பேயிருக்காது!
வானத்தில் விண் மீனிருக்கும்
தேனிருக்காது!
தாய் மனத்தில் அன்பிருக்கும்
துன்பிருக்காது!
அடுத்தடுத்து முயற்சி செய்தால்
வெற்றியுண்டாகும்!
அவர் வாழ்வில் சுவையிருக்கும்
பயமிருக்காது!