உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடிை o மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன். மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண் டாக இடங்கொடேன். ஸ்ர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயலுமாறு சூழ்வேன். பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனே, நடிப்பு இவற்ருல் பொருளிட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன். இடைகருத தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன். இயலாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சி யோடிருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம், இவற்ருேடிருப்பேன்."