உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாரதியும் பாரதிதாசனும் சொக்க வெள்ளித் தட்டு -மிகத் தூய வெண்ணெய்ப் பிட்டு தெற்கத்தியார் சுட்டு- நல்ல தேங்காய்ப் பாலும் விட்டு வைக்கச் சொன்ன தோசை-அது வயிரவட்ட மேசை; பக்கமீன்கள் பலவே- ஒரு பட்டத் தரசு கிலவே. -இளைஞர் இலக்கியம் : நிலா லேவான் ஆடைக்குள் உடல்மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுக த்தைக் கோலமுழு தும்காட்டி விட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ தோன்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ! காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கானல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ! அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்; அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்யேன்: பிந்திய யந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே தோன்! சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாஎன்றே இயற்கை அன்னை வானில் எழில் வாழ்வைச் சித்திரித்த வண்ணங் தானோ! உனைக்காணும் போதினிலே என்னுள்ளத்தில் o ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத்