உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவலர் விருந்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& Víf .




(தமக்கு சண்பரும் பேராதாவா யிருந்தவரும் சென்னை இராஜதானிக் கலர் சாலேயில் வடமொழித் தலைமைப் புலமையும் பாஷை நூற் புலமையும் ஒருங்கே முறைபெற நடாத்தினவருமாகிய தி. மி. சேஷகிரி சாஸ்திரியாரவர்கள், எம். ஏ., தேகவியோக மாயின. ஞான்று இவர்தம் பிரிவாற்ருமையால் இரங்கிப் பாடியது.)




அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்




கல்வியினிற் சேடனையு நற்குணத்திற் குன்றினையுங் கடுத்து நின்ற செல்வமுறு கலைஞற்குச் சேடகிரிப் பெயரிட்ட செம்மை நோக்கிப் பல்விதத்துங் களிசிறந்தேம் பாரிடத்தி னின்சீர்த்தி பரவல் கண்டே மொல்வகையி னின்னன்புக் குரியேமாய் காணுளு முவவா கின்றேம். (க) எந்தமக்கோர் பற்றுக்கோ டெனவிருந்த மறையவனே யெம்மி னிங்கி விந்தையினும் விக்தையென மறைந்ததற்கோர் புதுப்பொருளும் வியப்ப நாட்டி யந்தரர்கள் கைம்முகிழ்த்து கினேயழைத்தா சாதலின னன்னர் மாட்டு மந்தகை புரிந்துமண மகிழ்ந்தும்ப குலகுசென்ற வகைமை யென்னே (2) இவ்வாறி யாமன்றி பெம்போலு மேனேயரு மிருத்த றேர்ந்து மெவ்வாறு பிரிந்தன.கொ லெம்மிரக்கங் கேட்டிலேகொ வின்சொ லாள t வொவ்வாது கினதுசெய லொருமொழியு மெமக்குரையா யோடிப் போதல் செவ்வாக யாவாே கொள்கிற்பார் சேடகிரிச் செம்ம லேயோ! - (H)




ஆரியமாக் கடல்கடைந்திட் டாமிழ்த மளித்தவெழி லண்ண லேயோ சீரியசெந் தமிழ்க்கடலிற் குளித்துமுத்த நல்கியவெஞ் செல்வ னேயோ பாரியலு மாந்திரத்தின் மணமனத்துங் கொண்டுலவு பவன னேயோ வேரியபன் மலர்களெனு மொழிகளெலா மே ற்கொண்ட வேந்த னேயோ! (ச)




க. சேடன்-ஆதிசேஷன், அளக்கலுக் துளக்கலு மாகாத் தன்மையினுஞ் சேணுேர்க்கும் புலனு மாண்பினுங் குன்று குணத்திற் குவமையாயிற்று. கல்விச் செல்வமும் பொருட்செல்வமு மொருங்கு பெற்றிருந்த அருமை நோக்கிச் செல்வ முறு கலைஞ என்றனர். தற்குறிப்பேற்றவணி. களி - மகிழ்ச்சி. பார் இடத்தில் - உலகில். சீர்த்தி - புகழ். ஒல்வகை - கூடியவாறு. உவவா - உவந்து.




உ. பற்றுக்கோடு - ஆதாவு. மறையவன் - வேதியன். எம்மின் - எம்மினின் றும். விந்தை - வியப்பு. புதுப்பொருள் - புதிய கருத்து. வியப்ப - அதிசயிப்ப. காட்டி - கிறுவி. அந்தார் - தேவர். கைம்முகிழ்த்து - கைகுவித்து. மந்தங்கை - புன்னகை. உம்பருலகு - விண்ணுலகம். வகைமை - விதம்.




ஈ. ஏனையர் - பிறர். தேர்ந்து - தெரிந்து. இாக்கம் - புலம்பல். ஒவ்வாது - பொருந்தாது. செவ்வாக - நேரிதாக. கொள்கிற்பார் - கொள்வார். செம்மல் - தலைவன். - -




ச. ஆரியம்-ஸ்ம்ஸ்கிருதம். மாக்கடல்-பெரிய சமுத்திரம். கடல் கடைந்து அமிழ்' கம் அளித்தலின் நாராயணனை நிகர்ப்பாய் என்று குறிப்பித்தனர். முத்தம். முத்தம் போன்ற அரிய விடயங்கள். பாரியலும் - உலகில் நடைபெறும். ஆந்திரம்-தெலுங்கு. உலவும் - சஞ்சரிக்கும். பவனன் - வாயு. காற்றிற்குக் கந்தவாகன் என்னும் பெய ருண்மை நோக்குக. வேரி-தேன். வேரிய - தேனையுடைய மேற்கொண்ட-தரித்த, வேர்தன் - அரசன்.