உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 1 4 — களைப் பாவலர் எவர்க்கும் அஞ்சாது வெளிப்படுத்துகின்ருர், பெரியாரின் தமிழ்க் கொள்கை தமிழ் மொழிக்கு நலந்தராத தன்மையில் இருப்பதால்தான், அவர் கூறும் உயர்ந்த சீர் திருத்தங்கள் தமிழ்நாட்டில் ஆழப்பதியவில்லை. அ வரி ன் தமிழ்ப் பற்றில்லாக் கொள்கையால்தான் தமிழர் எழுச்சிக்கு அவர் புரட்சிக்கருத்துகள் அடிகோலவில்லை. அப்படியின்றிப் பாவலரின் பாவுள்ளம் தமிழரை இன்றில்லாவிடினும் என்ரு வது ஒருநாள் தட்டி எழுப்பக்கூடியது. அவர்தம் பாவடிகள் பட்டு உருவாகாத தமிழர் இனி இரார். அவர் முழக்கம் கேட்டு விழிக்காத தமிழன் இனி இரான். அவர் விட்டுச் சென்ற பணியினைத் தொடர்ந்து நடத்தக் கூடிய மறவர்களே அவர் ஏராளமாக உருவாக்கிச் சென்றுள்ளார். அவ. ரி ன் வலிந்த ஆழமான இடியேறு போன்ற நெடிய முழக்கம் தமிழகக் குன்றங்களிலும் காவிலும் என்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். 'வையம் ஆண்ட வண்டமிழ் மரபேl கையிருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும் உன் இளைஞர்கட்டம் எங்கே? மறிக்கொணுக் கடல்போல் மாப்பகை மேல்விடு: நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு! பொன்மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!” “...... ..சிறுத்தையே வெளியில் வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல் செயப் புறப்படு வெளியில்! சிங்க இளைஞனே திருப்பு முகம் திறவிழி! இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா? கைவிரித்து வந்த கயவர், நம்மிடைப் பொய்விரித்து நம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென்பார் எனில்