பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

13

நிர்ணயித்து அவளுக்குக் குடும்ப மேன்மை கிடையாது என்று இழிவுக்குரிய நோக்கில் நிலைநிறுத்தியிருக்கின்றனர்.

இந்தத் தேவதாசி முறை, கடவுளின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டாலும், ஒரு போகப் பொருளாக அவளை வாணிபச் சரக்காக்கும் அவலமே நிகழ்ந்து கொண்டு இருந்தது. விலைமகளுடன் தொடர்புகொள்ளும் ஆண், சமூகக் கவுரவம் பெற்றான். ஆனால், அந்த இழிவுக்குத் தள்ளப்பட்ட பெண்ணோ எல்லா வகுப்பினராலும் அவமதிக்கப்பட்டாள். இந்தக் கொடுமையை ஒழிக்க, சட்டம் கொண்டு வர, இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில டாக்டர் முத்துலட்சுமி, மூவலூர் இராமாமிர்தம் போன்றோர் அரும்பாடுபட்டிருக்கின்றனர்.

இவ்வாறு பெண் சமமில்லாத ஒரு சுயாதீனமற்ற வாழ்முறைக்குக் கட்டாயப்படுத்தப்படுவதன் காரணத்தை ஆராயும்போது, சில கூறுகள் தெளிவாகின்றன.

பெண் பிறப்பெடுக்கும் நேரத்திலிருந்தே, உடற் கூறியலை முதன்மைப்படுத்தும் மரபுகளில்தான் வளர்ச்சி பெறுகிறாள். இனப் பெருக்கத் தொழிலுக்காகவே அவள் - பிறப்பெடுத்திருக்கிறாள் என்ற கருத்து, அவளின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் அவளுக்கு வலியுறுத்தப்படுகிறது. இதனால் அவள் ஆணின் சார்புக்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் மனப்பாங்கைப் பெறுகிறாள். காது குத்திக் கம்மல் அணிவதும் மூக்கைத் துளைத்துக் கொண்டு பொன்னணி பூணுவதும், பட்டுப் பட்டாடைகளை உடுத்துவதும், உடலழகை மிகைப்படுத்திக் கொள்ளும் நோக்கையே குறிப்பாக்குகிறது. இவ்வாறே, அறிவுமலர்ச்சி என்ற குறிப்பே, பின்னுக்குத் தள்ளப்படுகிறது.