உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii திட்ட விளக்கமாகிய அவர்தம் வெளியீட்டின் அடிப் படையிலே அப்படியே அமைத்துள்ளேன். எனினும் அந்தப் பாடத்திட்டத்தினை நான் அப்படியே ஏற்றுக் கொள்ள வில்லை என்பதையும் அதிலும் பெருமாற்றங்கள் தேவை என்பதையும் இந்த நூலிலேயே சிலவிடங்களில் சுட்டி யுள்ளேன். மேலும் அந்தக் கல்வி முறை செயலாற்று வதில் உணடான குறைபாடுகளைச் சுட்டிய நாளேட்டின் குறிப்பினையும் அப்படியே அடிக் குறிப்பாகக் காட்டி, அத்தகைய குறைபாடுகள் அனைத்திந்திய அடிப்படையிலோ நம் தமிழகத்திலோ தலக்காட்டக் கூடாது எனவும் சுட்டி யுள்ளேன். அப்படியே பிற கட்டுரைகளிலும் பிறவற் றிலும் உள்ள கருத்துக்கள் அனைத்தையும் நான் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் ஒருசில மேலும் மாற்றம் பெறத்தக்க வகையில் உள்ளன என்பதையும் நூல்வழிச் செல்வார் அறிவர். கல்வி வாழ்வோடு பொருந்தியதாக அமைய வேண்டும் என்பதை நல்லவர் யாவரும் வரவேற்பர். கல்விக் கூடங் களெல்லாம் தொழிற் கூடங்கள் இணைந்தனவாக இலங்க வேண்டும் என்று பலர் பேசுகின்றனர். வெறும் பள்ளிப் படிப்பும் வாழ்வோடு பிணைந்ததாக அமைய வேண்டும் என்பதைப் பாரதப் பிரதமர் முதல் பலரும் நம் நாட்டிலும் உலகிலும் வற்புறுத்தி வந்தும் இன்னும் நம் நாட்டில் அது செயல்படத் துவங்காதது வருந்துதற்குரியதேயாகும். ஆங்கில நாளேடாகிய இந்து (1-12-76) நம் பிரதமர் வாக்கினைச் சுட்டி, பிள்ளைகள் பெற்ருேருக்கு உதவ இடையிலே பள்ளிக் கல்வியினை விடுவது கூட, அவ்வினை வாழ்வோடு பொருந்தும் ஒன்ருனமையின், மேலானதே என்பதை விளக்கி, எனவே நாட்டுக் கல்வி எல்லோருக்கும் வாழும் வாய்ப்பு அளிக்கும் தொழில் அடிப்படையில்