உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii லதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளுடன் வேண்டிய அளவு பள்ளிகளே இணைத்து மாணவர்களுக்கு வாழ்வுக் கல்வியை ஏட்டுக் கல்வியுடன் இணைக்க வழிகாட்ட வேண்டும். கிரா மப்புரங்களில்- தொழிற்சாலை இல்லாத இடங்களில் அர .சாங்கம் கூட்டுறவுச் சங்கங்கள் வழியோ வேறு வழியோ அவ்வச் சூழலுக்கு ஏற்ற தொழிற்சாலை நிறுவ ஆவன செய்ய வேண்டும். இன்னும் எத்தனையோ எண்ணங்கள் உள்ளத்தில் உருவாகின்றன. அவற்றையெல்லாம் பின் தேவையான போது கொட்டிக் காட்டலாம் என எண்ணுகிறேன். இத்தகைய முறையில் கல்வி அமையின் காட்டுச் சமுதாயமும் கல்வித்துறையும் வளர்ச்சி பெறுவதோடு, வேலே இல்ல்ாப் பட்டாளம்' நாட்டில் இல்லையாகப் போவ தோடு, காட்டில் எல்லாப் பொருள்களும் எளிதில் கிடைக்க வாய்ப்பும் உண்டாகும். சிறு தொழில் தொடங்கிப் பெருங் தொழில் வரையில் நாட்டில் பெருக, அதன் வழியே கைத் தொழில் திறன் ஓங்க வாய்ப்பும் உண்டாகும். அப்படியே விவசாயம் முதலிய உணவுப் பொருள் பெருக்க கிலேயும் போற்றப் பெற நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கும். 'எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்த வழி பிறக்கும். பொருளாராத அடிப்படையே இக்கல்வித்திறத்தால் உயர்ச்சி பெறும். எனவே புதிய கல்வி முறையை, அடிப்படைத் தன்மை கெடாவகையில், அனைவரும் சேர்ந்து விரைந்து செயலாற்ற முன் வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளு .கிறேன். அரசாங்கமும் சமுதாயமும் எல்லா ஏற்பாடுகளையும் திறன்படச் செய்த போதிலும் அவற்ருல் பயன் விளையு மிடங்களாகிய பள்ளிகளும் கல்லூரிகளும் நன்கு செயலாற்ரு விடின் பயன் விளையாது. இவற்றில் பயிற்றும் ஆசிரியர்கள் திறம்பெற்றவராக, தம் தம் தொழிலிலோ கல்வியிலோ