உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பெற அவன் வழி ஆற்றுப்படுத்தான் என்ற வகையிலே அமைகின்றது. எனவே இந்திய நாடு முழுவதிலும் - வடக் காயினும் தெற்காயினும் - உத்தரப்பிரதேசமாயினும் கேரள மாயினும் இத்தகைய நல்லவரும் வல்லவருமாகிய ஆசிரியர் களிடத்துப் பிள்ளைகளே ஒப்படைத்துக் கல்வி அளிக்கும் முறை அக்காலத்தில் சிறந்திருந்தமையைக் காண்கிருேம். பாரதத்திலே வரும் மற்ருெரு கதை இங்கே நமக்கு நினைவுக்கு வருகின்றது. ஏகலைவன் கதைதான் அது. துரோணர் ஏதோ சாக்குக் காட்டி அவனை மாணவகை ஏற்றுக் கொள்ளாத போதிலும், அவன் தனித்த முறையிலே அவர் மற்றவர்களுக்குக் கற்றுத் தந்த பாடங்கள் அனேத்தை யும் அவர்தம் மாளுக்கரைக் காட்டிலும் சிறக்கக் கற்று உயர்ந்தான் எனக் காண்கின்ருேம். இந்த வகையில் தான் இக்காலத்திலும் செயல்முறையைச் சார்ந்த கல்வி - (Formal Education), @@@GLITs) plub 3,306? - (Open University Education) போன்று பல பேசப் பெறுகின்றன. வகுப்பில் கட்டாயமாக உட்கார வேண்டிய நிர்ப்பந்தத்தால் உட்கார்ந்து, பலரொடு கூடிப் பல கெட்ட பழக்கங்களால் கெட்டுச் சீரழியும் சில மாணவர்களைப் போன்றும் அவர் களால் பிறரும் கெடும் கல்விகிலே போன்றும் இன்றித் தனி யாற்றல் பெற்ருல், நல்லாசிரியர் காட்டும் நெறி கின்று வல்லவராதல் சிறப்பு என்பதையே இந்த ஏகலைவன் கதை நமக்குக் காட்டுகின்றது. மாலேக் கல்லூரிகள், அஞ்சல்வழிப் பயிற்சி முறை போன்ற நடைமுறையில் உள்ளவையும், இனி வர இருக்கும் நேரடி உயர் தேர்வுக்குச் செல்லும் தகுதி போற்றும் கல்வி முறைகளும் இந்த அடிப்படையில் அமைக் தனவே. ஆழ்ந்தகன்ற கல்வி நலம் பெற வேண்டுமாயின், கற்போர் உள நிலைக்கு ஏற்பக் கல்வி அமைய, அவர்கள் தனியாகவோ தேவையாயின் ஒரு கல்லாசிரியர் வழியோ அக்கல்வியைக் கற்றல் அமைவுடைத்தாகும். தற்காலப்