உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 களோ அனைத்தும் நாட்டுப் பகுதிகள் அனைத்துக்கும் ஒன் ருகத்தானே அமையும். கீழ் வகுப்புக்களில் (5-ஆம் வகுப் பிற்குக் கீழ்) வேண்டுமாயின் கில நூல், வரலாறு போன்றவை அவ்வம் மாநில, மாவட்ட அடிப்படைகளில் அமையலாம். ஆனல் அவற்றிற்கும் பொதுவான அமைப்பு முறையை அனைத்திந்திய அடிப்படையில் அமைக்கலாம். மேல் வகுப்புக்களில் எல்லாவற்றிற்கும் ஒரே வகையில் பாடத்திட்டத்தினை அமைத்து அவற்றை ஆங்கிலம் அல்லது வட்டார மொழிகளில் (இந்தி உட்பட) வெளி யிட ஏற்பாடு செய்யின் காட்டு ஒருமைப்பாடு உரு வாகாதா ? அத்துடன் எவ்வளவு பணச் செலவும் பிற செலவுகளும் குறைந்து வீண் விரயம் நீங்கும்! மேலும் தனி மாநிலம் மனம்போன போக்கிலே பாடங்களே வகுத்தும், கட்சிப் பிரசாரத்துக்கென்று பாட நூல்களே ஆக்கியும் செயல்பட, பிறகு அதைக் களைய ஒரு உட் குழுவை நியமிக்கும் தேவையும் இல்லையாகுமே. மொழி அமைப்பிலும் ஒரு வரையறுத்த திட்டம் காட்டில் இல்லை. சுமார் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு பாடத் திட்டத்தின் மொழி மாற்றத்தால் எங்கோ பின் தங்கி விட்டது என இன்று பலர் கூக்குரலிடுகின்றனர். ஏன் இந்த அவல நிலை? இங்கே தமிழும் வளரவில்லை; இந்தியும் இடம்பெறவில்லை, ஆங்கிலத்தின் தரமோ அடிப் படையில் அமிழ்ந்து விட்டது. இது உண்மையென்பதைத் தமிழ்நாட்டில், அரசாங்கப் பள்ளிகளும் மானியம் பெறும் இலவசப் பள்ளிகளும் பல இருக்க, தனியார் தம் ஆங்கிலப் பள்ளிகள் அளவற்று வளர்கின்ற ஒன்றே எடுத்துக் காட்டுமே. நல்லவேளை இப்போதாவது மத்திய அரசாங்கம், தன் ஹையர் செக்கண்டரி போர்டின் துணையால், தமிழ் நாட்டில் பல பள்ளிகளை நிறுவ முன் வந்திருப்பது மகிழ்ச் குரியதாக அமைகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் 2