உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi மனிதனே வாழ வைக்கப் பயன்படுவதன்றி, போட்டியும் பொருமையும் கொள்ளப் பயன்படுவதன்று என்பதோடு, மனிதன் தான் வாழும் சமுதாயத்தோடு ஒன்றி, அதில் தானும் ஓர் அங்கமாக கின்று செயலாற்றி உயர வழிகாட்டியாக அமைவதாகும். இதேைலயே தாமின் புறுவது உலகின் புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்" என வள்ளுவர் கூறியுள்ளார். இத்தகைய கல்வி முறை நாடு தோறும் பலவகையில் போற்றப் பெறுகின்றது. வெறும் ஏட்டுப் படிப்பால் பய. னில்லை என்பதைக் கண்ட பல மேலைநாடுகள் இந்த நூற். ருண்டின் தொடக்கத்திலேயே-ஏன்? - அதற்கு முன்பே வாழ்வுக் கல்வியோடு ஏட்டுக் கல்வியையும் இணைத்துப் போற்றத் தொடங்கி விட்டன. இந்த உண்மையினைச் சுட்டிக் காட்டவே ஆங்கிலப் பேரகராதியிலிருந்து (Encylopaedia Britannica) Gao QLĖight @š FT633) எடுத்துக் காட்டியுள்ளேன். நான் காட்டிய விளக்கங்கள் போன்று இன்னும் எத்தனையோ விளக்கங்கள் எத்தனையோ தலைப்புகளின்கீழ் எழுதப் பெற்றுள்ளன. அளவு கருதி நான் ஒருசிலவற்றையே தொட்டுக் காட்டினேன். ஆசிரியர் பெற்ருேர் தொடர்பு, பள்ளி விழாக்களில் பெற்ருேர் பங்கு, பள்ளியின் வளர்ச்சியில் பெற்ருேர், பொதுமக்கள் பங்கு, வளரும் பள்ளிகளின் எதிர்காலம் முதலியன பற்றியும் தொழிற்கல்வி போன்றவை ப ற் றி யு ம் வேறு பல ஆக்கப் பணிகள் பற்றியும் இந்த நூற்ருண்டின் தொடக் கத்தில் அந்த நாடுகள் காட்டிய அக்கறையினையும் ஆக்க நெறி முறைகளையும் அந்தத் தொகுப்பில் காணலாம். நம் நாட்டில் இந்த வகையான முன்னேற்றங்கள் நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவில் உள்ளன. நான் எடுத்தாண்ட அந்த 1929 ஆண்டின் பதிப்பிற்குப்