உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

கீதங்களையும் ஸ்தோத்திர பாக்களையும், வேதாந்தக் கவிகளை யும், பாஞ்சாலி சபதத்தையும் பாடிய பாரதியார், காட்சிகள்’ எழுதியதன் மூலமாகத் தமது பெருமையைக் குறைத்துக் கொண்டார் என்பதுதான் எனது அபிப்பிராயம். இந்தக் கோட்சி” களில் அடங்கிய வசன கவிதைகளே கவிதைத் தொகுதியில் சேர்த்ததே எனக்குப் பிடிக்கவில்லை.

“மாதமோர் நான்காய் நீர்-அன்பு வறுமையிலே என்ன ஆழ்த்தி விட்டீர் என்று பாரதியார் வாணியைக் குறித்துப் பாடுகிருர் அல்லவா? அப்படி வாணியின் அன்பு தோன்ருத காலத்தில், அதாவது தூண்டுதலும் ஆர்வமும் ஆற்றலும் இல்லாத காலத்தில்தான் பாரதியார் இந்த வசன கவிதைகளே எழுத நேர்ந்தது என்று நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் எட்வர்ட் கார்பெண்டரும், வால்ட் விட்மனும், ஹென்லியும், ஆமிலோவல்லும், இவரும் அவரும் வசன கவிதை எழுதுகிருர்களே என்பதற்காக நாமும் எழுத வேண்டுமா என்ன? தமிழில் வெண்பா என்ன, விருத்தம் என்ன, மெட்டுப் பாட்டுகள் என்ன, இவைகள் ஒவ்வொன்றி லும் அநேக விதங்கள் என்ன, இவைகளேயெல்லாம் ஒரு நல்ல கவி, சிறந்த கவி எவ்வளவு அற்புதமாகக் கையாளுகிருன் என்பதை ஏன் நாம் மறக்க வேண்டும்? இவைகள் மூலமாகக் காட்ட முடியாத எந்த ரசபாவத்தை இந்த வசன கவிதை காட்டப் போகிறது?’

எஸ் ஸின் கடிதத்துக்கு, கவிதைத் தொண்டள் பதில் கூறவில்லை. அவருக்குப் பதிலாக ரஞ்சன்’ என்று கையெழுத் திட்டு பின் வரும் கடிதம் பதின்ைகாவது இதழில் வெளியா யிற்று.

கவிதைத் தொண்டனுக்கு 'எஸ்' பதிலளித்திருக்கிருர், சிறிய விஷயங்கள் எவ்வளவு அயைாசமாகத் தட்டுக் கெட்டுப் போய் விடுகின்றன என்பதற்கு அவருடைய பதில் ஒரு அத்தாட்சியாக விளங்குகிறது. முதல் பாராவையும் மூன்ருவது பாராவையும் வைத்துப் பொருத்தப் பார்க்க